தமிழகம்

கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு – 4 வீடுகள் தரைமட்டம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சேலம் அருகே வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழப்பு, 10 பேர் படுகாயமடைந்தனர். 4 வீடுகள் தரைமட்டமானது.

Gas Cylinder explosion Kills One in Salem || சேலம்: வீட்டில் கேஸ் சிலிண்டர்  வெடித்து விபத்து - ஒருவர் பலி

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட கருங்கல்பட்டி பாண்டுரங்க நாதர் தெருவில் வசித்து வருபவர் கணேசன். இன்று காலை சுமார் 6.30 மணி அளவில் இவரது இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் பயங்கர சத்தத்துட வெடித்து சிதறியுள்ளது.

இதனால், அவரது வீடு மற்றும் சுற்றியுள்ள 5 வீடுகள் இடிந்து சேதமடைந்தது. இந்த இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புப்படையினர், போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டனர்.

ALSO READ  என் 100 கோடி எங்கே? - இந்தியன் வங்கி மீது சென்னை துறைமுக கழகம் வழக்கு…! 
tn gas cylinder explosion: சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து… 4  வீடுகள் தரைமட்டம்! - gas cylinder explosion in salem one person killed 10  injured | Samayam Tamil

எனினும், இந்த விபத்தில் ராஜலெட்சுமி (70) என்ற பெண் உயிரிழந்துள்ளார். மேலும், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சேலத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து

இந்த விபத்தில் கணேசன், கோபி, தீயணைப்பு அலுவலர் பத்மநாபன், வெங்கட்ராஜன் ஆகியோரது வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளது. சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் பார்வையிட்டனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அழகாக இல்லை என சொன்ன கணவன்… மனைவி எடுத்த விபரீத முடிவு

Admin

பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: மாணவர்கள் குஷியோ குஷி

naveen santhakumar

மாணவர்கள் பழைய பஸ் பாஸ் வைத்தே பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம் -அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி :

naveen santhakumar