திருப்பூர் உதவி மாவட்ட ஆட்சியராக நடிகர் சின்னிஜெயந்த் மகன் ஸ்ருதன்ஜெய் நாராயணன் பதவியேற்று கொண்டார்.
தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் பயிற்சி பெற்று வந்த உதவி ஆட்சியர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு உதவி ஆட்சியர்களாக நியமிக்கப்பட்ட நிலையில் திருப்பூர் உதவி ஆட்சியராக பணியாற்றி வந்த பண்டரிநாதன் இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக தூத்துக்குடி மாவட்டத்தில் உதவி ஆட்சியராக பயிற்சி பெற்று வந்த ஸ்ருதன் ஜெய் நாராயணன் பணி நியமனம் செய்யப்பட்டதையடுத்து புதியதாக நியமிக்கப்பட்ட ஸ்ருதன்ஜெய் நாராயணன் திருப்பூர் உதவி ஆட்சியராக இன்று காலை பதவி ஏற்றார். மேலும் இவர் நடிகர் சின்னிஜெயந்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

பொறுப்பேற்ற பின் ஸ்ருதன்ஜெய் நாராயணன், எனது முழு உழைப்பும் திருப்பூர் மக்களுக்காக இருக்கும் என்றும் திரைத்துறையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் எனது பெற்றோர் சிறு வயது முதலே கல்வியை முதன்மையாக போதித்தனர். அவர்களுக்கு எனது நன்றி எனவும் கூறினார்.