தமிழகம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சேலத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் பணியாற்ற உள்ள அரசு ஊழியர் மற்றும் அரசியல் கட்சி முகவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது…….

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை மே இரண்டாம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் ஊழியர்கள் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் அல்லது கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்றிதழ் எடுத்து வந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் சேலம் மாநகர பகுதியில் வாக்கு எண்ணும் மையங்களில் பணியாற்ற உள்ள 450 ஊழியர்கள் மற்றும் 300 அரசியல் கட்சி முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர். இன்று முதல் நாள் என்பதால் அரசு ஊழியர்களுக்கு பரிசோதனையானது நடைபெற்று வருகிறது. மாநகரப் பகுதியில் 3 மையங்களில் 6 குழுக்கள் அமைக்கப்பட்டு மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது. 

ALSO READ  கொரோனா வைரஸை முதன்முதலில் கண்களால் கண்ட பெண் மருத்துவர்... அது குறித்து அவரது பேட்டி...


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நாளையோடு டாட்டா… வடகிழக்கு பருவமழை குறித்து வானிலை ஆய்வு மையம் பரபரப்பு அறிவிப்பு!

naveen santhakumar

சென்னை மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் பயணிகள் அதிகரிப்பு..

Shanthi

கொரோனா தாக்கத்தை உணராத பொதுமக்கள்; காற்றில் பறக்கும் சமூக இடைவெளி !

News Editor