தமிழகம்

நிஜத்திலும் ஹீரோவாக இருங்கள்- நடிகர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் ரூ. 1 லட்சம் அபராதம் ..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

விஜய்யிடம் விலை உயர்ந்த பல கார்கள் உள்ளன. இதில் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்குமதி செய்தார். அந்த காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் விஜய்யின் வழக்கை தள்ளுபடி செய்ததோடு சொகுசு காருக்கு வரி விதிக்க தடை கோரியதற்காக விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

ALSO READ  தமிழ்நாடு பாஜக மாநில துணைத் தலைவருக்கு கொரோனா... 

நடிகர்கள் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது, வரி ஏய்ப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். வரி என்பது நன்கொடை அன்று, கட்டாயம் பங்களிப்பு என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தாங்க முடியாத துயரில் ஸ்டாலின்… மாபெரும் இழப்பு என ஆதங்கம்!

naveen santhakumar

வேலூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா….

naveen santhakumar

வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை !  

News Editor