தமிழகம்

War Room-ல் இருந்து ஸ்டாலின் பேசுகிறன்; திடீர் விசிட் அடித்த முதல்வர் ! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் தொற்று குறைந்தபாடு இல்லை.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 31,892 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அசுர வேகத்தில் பரவும் கொரோனாவை தடுக்க மாவட்ட தலைமை இடத்தில கொரோனா கட்டளை மையத்தை அமைத்து 24 மணிநேரமும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று இரவு தனது பணியை முடித்துவிட்டு டி.எம்.சி வளாகத்தில் உள்ள கொரோனா கட்டளை மையத்திற்கு திடீர் வருகை புரிந்தார். அங்குள்ள அதிகாரிகளுடன் மையத்தின் செயல்பாடு குறித்து கேட்டறிந்தார். பொதுமக்களின் அழைப்புக்கு ஊழியர்கள் பதிலளிக்கும் பகுதிக்கு வந்த முதல்வர், ஒரு அழைப்பை தானே பெற்று, முதல்வர் ஸ்டாலின் பேசுகிறேன் என்று கூறி குறையைக் கேட்டறிந்தார்.

ALSO READ  கொரோனா பாதித்த கணவரை காணவில்லை என்று கூறிய மனைவி; தகனம் செய்து விட்டோம் என்று கூறிய மருத்துவமனை நிர்வாகம்…

 பின்னர் அதற்கு தீர்வு காணும்  வகையில் செயல்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் கொரோனா கட்டளை மையத்தில் பணிகள் தொய்வின்றி நடிக்க வேண்டும் என கூறியுள்ளார். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகம், புதுவையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு..

Shanthi

விஜயகாந்த் படத்தை இயக்கிய இயக்குநர் ஏவிஎம் அருகே இறந்து கிடந்த சோகம்….

naveen santhakumar

கல்லூரிக்குள் புகுந்த கொரோனா… 40 மருத்துவ மாணவர்களுக்கு தொற்று!

naveen santhakumar