உலகம்

ஒடிசா ரெயில் விபத்து – ஜப்பான் பிரதமர் இரங்கல்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானத்தில் 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் “ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்கள் பலி மற்றும் காயம் அடைந்த செய்தியால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். ஜப்பான் அரசு மற்றும் மக்கள் சார்பாக, உயிர் இழந்தவர்களுக்கும், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் எங்கள் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.” இவ்வாறு ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார்.


Share
ALSO READ  மனித எலும்புக்கூடுகளுடன் ஜப்பான் கடற்பகுதியில் கரை ஒதுங்கிய பேய் படகு..! 
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘இந்தியாவின் தலைமையை பார்க்க சிறப்பாக இருக்கிறது’ : பில்கேட்ஸ் கருத்து !

News Editor

11,500 ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் நிகழக்கூடிய அரிய நிகழ்வு.. 

naveen santhakumar

பிரம்மாண்ட செலவில் உலகின் மிகப்பெரிய செயற்கை நீரூற்று:

naveen santhakumar