உலகம்

தான்சானியா நாட்டில் பழம் மட்டும் ஆடு ஆகியவற்றில் கொரோனா- அதிபர் தகவல்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share


தார் எஸ் சலாம் (Dar Es Salaam) :-

தான்சானியா நாட்டில் ஆடு மற்றும் Pawpaw பழம் (பப்பாளி) ஆகியவற்றின் மேற்கொள்ளப்பட்ட மாதிரி சோதனையில் அவற்றில் கொரோனா இருப்பதாக முடிவுகள் வெளியானது. இதைத்தொடர்ந்து கொரோனா பரிசோதனை கருவிகள் தவறான முடிவை தருகிறது என்று அந்நாட்டின் அதிபர் ஜான் மகுஃபுலி (John Magufuli) அவற்றுக்குத் தடை விதித்துள்ளார்.

ஆரம்பம் முதலே தான்சானியா நாட்டின் அதிபர் ஜென் மகுஃபுலி கொரோனா பரவலை சரியாக கையாளவில்லை என்று விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து தருவிக்கப்பட்ட கொரோனா பரிசோதனை கருவிகள் அனைத்தும் தவறான முடிவுகளை காட்டுகிறது என்றும் எனவே மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் நாட்டை விட்டு அகல வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

ALSO READ  ஒசாமா பின்லேடனை தியாகி என்ற இம்ரான் கான்... 

தான்சானியாவின் வடமேற்குப் பகுதியிலுள்ள சாட்டோ Chato நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்த தகவலை தெரிவித்தார். 

வெளி நாட்டில் இருந்து வாங்கப்பட்ட பரிசோதனை கருவிகள் அனைத்தும் தவறான முடிவுகளைத் தருகிறது. மேலும் அவை அனைத்துமே பழுதானவை என்றும் கூறியுள்ளார்.

John Magufuli.

மனிதர்களில் எடுக்கப்படாமல் ஆடு மற்றும் pawpaw பழம் ஆகியவற்றில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரிகளில் மனிதர்களில் பெயர் மற்றும் வயது சேர்த்து அனுப்பப்பட்டு தான்சானியாவில் உள்ள ஆய்வகங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வெளியான முடிவுகளில் அவற்றில் கொரோனா வைரஸ் இருப்பதாக வெளிவந்துள்ளது. ஆனால் உண்மையில் அவற்றில் கொரோனா தொற்று இல்லை. 

ALSO READ  நோக்கியா ஸ்மார்ட் டிவி விரைவில் அறிமுகம்

இதையடுத்து கருவிகள் அனைத்தும் திரும்ப அனுப்பிவிட்டு புதிய கருவிகள் வெளிநாட்டில் இருந்து வாங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கூறிய அதிபர் ஜான் மகுஃபுலி மடகாஸ்கர் அதிபர் ஆன்ட்ரை ரஜோலின் (Andry Rajoelina) அந்நாட்டில் மக்களுக்கு பரிந்துரைத்து வரும் மூலிகை கலவையை வாங்கி வருவதற்காக விமானம் ஒன்றை அனுப்ப உள்ளேன் என்றார். அவனால் இந்த மூலிகைக் கலவை இதுவரையில் சர்வதேச பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை என்பது கூடுதல் தகவல்.

Andry Rajoelina.

தான்சானியா நாட்டில் 480 பேருக்கு கொரோனா தொற்று எற்பட்டுள்ளது. இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இஸ்ரேலுக்கான சீன தூதர் இஸ்ரேலில் மர்ம மரணம்…

naveen santhakumar

ஜெர்மனியில் நிர்வாணமாக சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்… காரணம் என்ன..???

naveen santhakumar

உலகம் முழுவதும் கொரோனாவால் லட்சக்கணக்கான குழந்தைகள் இந்த வருட இறுதிக்குள் உயிரிழக்க நேரிடும் ஐநா எச்சரிக்கை…

naveen santhakumar