உலகம்

துபாயில் நடக்கும் இலக்கிய திருவிழாவில் சிறப்பு விருந்தினராக மலாலா பங்கேற்பு :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

துபாய்:

மலாலா யூசப்சையி (23) கடந்த 1997-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ம் தேதி பாகிஸ்தானில் உள்ள மிங்கோரா என்ற ஊரில் பிறந்தவர்.அந்த ஊரில் தலிபான் பயங்கரவாதிகளால் பெண்கள் பள்ளிக்கூடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இவர் தனது 12 வயதில் கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி ஒரு பெண்ணாக பள்ளிக்கு சென்றதால் தலிபான் பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுடப்பட்டார்.

இந்த சம்பவம் அவர் ஒரு போராளியாக மாற வித்திட்டது. அதன்பின் லண்டனில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு உலக அளவில் பெண்கள் கல்வி மற்றும் முன்னேற்றத்திற்காக இளம் வயதில் போராட ஆரம்பித்தார். இதற்காக தன் பெயரில் ஒரு அறக்கட்டளை நிறுவினார். தொடர்ந்து அவருக்கு 2014-ம் ஆண்டு “அமைதிக்கான நோபல் பரிசு” வழங்கப்பட்டது. உலகிலேயே இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  ரஷ்ய இயக்குனரால் விண்வெளியில் படமாக்கப்பட்ட 'தி சேலஞ்ச்' ஆவணப்படம்

இந்த ஆண்டு எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் சார்பில், துபாய் கலாச்சாரம் மற்றும் கலை ஆணையத்தின் ஆதரவுடன் இலக்கிய திருவிழா நடத்தப்பட உள்ளது.வரும் ஜனவரி 29-ம் தேதி ஜமீல் கலை மையத்தில் தொடங்கும் இந்த விழா பிப்ரவரி 13-ந் தேதி அல்செர்கல் அவென்யூ வளாகத்தில் நிறைவடைகிறது.

இந்த விழாவில் இந்திய எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர் சத்யார்த் நாயக் கலந்துகொண்டு மறைந்த நடிகை ஸ்ரீதேவி குறித்து பேசுகிறார். மேலும் புக்கர் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட பெண் நாவலாசிரியர், இந்திய வம்சாவளியை சேர்ந்த அவ்னி தோஷி உள்ளிட்ட பல்வேறு படைப்பாளர்கள் கலந்துகொள்கின்றனர்.
இதில் சிறப்பு விருந்தினராக நோபல் பரிசு பெற்ற இளம்பெண் ‘மலாலா’ கலந்துகொண்டு பேசுகிறார். இதில் உலக அளவில் பெண்களின் நிலை, அவர்களது முன்னேற்றம் மற்றும் கல்வி குறித்து பேச இருக்கிறார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியா தாக்குதல் நடத்தும் என்று கேட்டதும் கால்கள் நடுங்கியது-பாகிஸ்தான்

naveen santhakumar

கல்வான் பள்ளத்தாக்கு மோதல்….உயிரிழப்பை ஒப்புக்கொண்ட சீனா….

naveen santhakumar

கொரோனா குறித்து 40 ஆண்டுகளுக்கு முன்பே கூறிய நாவல்.

naveen santhakumar