உலகம்

267 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட டேட்டா கசிந்து…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பேஸ்புக் நிறுவனம் மீண்டும் மிகப் பெரிய சிக்கலில் சிக்கியுள்ளது. வழக்கம் போல் பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் மீண்டும் வலைதளத்தில் வெளியாகியுள்ளது. பயனர் தரவுகளில் கவனமாக இருப்பேன் என்று பேஸ்புக் நிறுவனம் உறுதியளித்த போதிலும், மீண்டும் பல மில்லியன் பயனர்களின் தகவல்கள் வெளிப்படையாக கசிந்துள்ளது. சுமார் 267 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் வலைத்தளத்தில் வெளிப்படையாக அம்பலமாகி, கசிந்துள்ளது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் எப்படிக் கசிந்தது என்ற கேள்விக்கு பேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஜியோவை தொடர்ந்து இலவசத்தை அறிவித்த ஏர்டெல் சட்டவிரோத ஸ்கிராபிங் பேஸ்புக் நிறுவனத்தின் பேஸ்புக் ஏபிஐ தளத்தில் ஏற்பட்ட சட்டவிரோத ஸ்கிராபிங்(Scraping) என்று அழைக்கப்படும் துஷ்பிரயோக சிக்கலால் தான் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளதென்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. வலைத்தளத்தில் கசிந்துள்ள இந்த 267 மில்லியன் பயனர்களின் தரவுகளில் பெரும்பாலும் அமெரிக்காவிலிருக்கும் பயனர்களின் தகவல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பல மில்லியன் பயனர்களின் தகவல்கள் வெளிப்படையாக அம்பலப்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பேஸ்புக் தளத்தில் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு சிறந்த பாதுகாப்பு சேவை வழங்கப்படும் என்று மீண்டும் பேஸ்புக் நிறுவனம் பதில் அளித்துள்ளது. இதற்கு முன்பு இதேபோல் நிகழ்ந்த அசம்பாவிதத்திற்குப் பின் பயனர்களின் பாதுகாப்பைப் பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை சுமார் 100 மூன்றாம் நிலை பயன்பாட்டு செயலிகள் மூலம் பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் கசிவதாகவும், அவற்றை தடுக்க பல நடவடிக்கைகளை நிறுவனம் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்களின் தகவல்களை பாதுகாக்க பேஸ்புக் போராடி வருவதாக தெரிவித்துள்ளது.


Share
ALSO READ  கிறிஸ்மஸ் கொண்டாட சென்ற மாடல் அழகி: 470 கோடி கொள்ளையடித்த மர்ம நபர்கள்
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஊழியர்களுக்கு ஆயிரம் டாலர்கள் போனஸாக அறிவித்தது பேஸ்புக் நிறுவனம்…

naveen santhakumar

திமிங்கலத்தின் வாந்தி மூலம் கோடீஸ்வரரான குப்பை பொறுக்குபவர்…

Admin

ஆச்சரியம்….ஆனால் உண்மை….இந்த நாட்டு கடிகாரத்தில் மட்டும் 11 எண்கள் தான் இருக்கு….

naveen santhakumar