உலகம்

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கான திட்டத்தை பிரிக்ஸ் நாடுகள் ஏற்றுக் கொள்கிறது -பிரதமர் மோடி.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கான திட்டத்தை பிரிக்ஸ் நாடுகள் ஏற்றுக் கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் அமைப்பான பிரிக்ஸின் 13வது மாநாடு நேற்று டெல்லியில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. 2012 மற்றும் 2016ஆம் ஆண்டிற்குப் பிறகு மூன்றாவது முறையாக இந்த ஆண்டின் மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்தியது. மாநாட்டுக்கு இரண்டாவது முறையாக பிரதமர் மோடி தலைமை தாங்கி உரையாற்றினார். இந்தியாவுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கிய அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் சர்வதேச பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் பிரிக்ஸ் அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த மாநாட்டில் இந்தியா முன்மொழிந்த டெல்லி பிரகடனத்தை பிரிக்ஸ் அமைப்பின் தலைவர்கள் ஒருமனதாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இதில் ஆப்கானிஸ்தானின் அமைதி மற்றும் மதநல்லிணக்க செயல்முறையை உறுதிபடுத்தும் வகையில் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ALSO READ  மோடி - சீன அதிபரை வரவேற்று தமிழக அரசு சார்பில் பேனர் வைக்கலாம்

ஆப்கானிஸ்தானில் நடக்கும் மாற்றங்கள் அண்டை நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். ஆப்கானிஸ்தானில் தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். ஆப்கானிஸ்தான் தீவிரவாத அமைப்பகளின் இடமாக மாறி விடக்கூடாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் தலைவர்கள் யாரும் தாலிபான்களுக்கு எதிராக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.முன்னதாக காபூல் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த வர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. சா.கற்பகவிக்னேஷ்வரன்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சிறை ஜோடிக்கு திருமணம் செய்ய அனுமதியா?

Admin

2019 ஆண்டுக்கான ஆஸ்கர் விருது பரிந்துரைகள்!!!

Admin

ரஷ்ய கிரெம்ளின் மாளிகைக்கும் கொரானா தொற்று பரவியது

News Editor