உலகம்

இந்தியாவின் மூவர்ணக் கொடியை தனது நாட்டிலுள்ள மலைச்சிகரத்தில் ஒளிரச் செய்த ஸ்விட்சர்லாந்து…காரணம் என்ன தெரியுமா???

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share


ஜெனிவா:-

ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஆல்ப்ஸ் மலையில் உள்ள மேட்டர்ஹான் (Matterhorn) சிகரத்தில் இந்தியாவின் மூவர்ணக் கொடியை வண்ண ஒளிரச் செய்து ஸ்விட்சர்லாந்து அலங்கரித்து வைத்திருந்தது.

கொரோனா வைரஸுக்கு எதிராக போராடும் இந்தியாவிற்கு தனது சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் சுவிட்சர்லாந்து அரசு இவ்வாறு செய்துள்ளது.

இது குறித்து ஸெர்மாட் நகரை சேர்ந்த (Zermatt Matterhorn) சுற்றுலா அமைப்பு தனது பேஸ்புக் பக்கத்தில்  செய்திருந்த பதிவில்:-

உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியா தற்பொழுது கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது கொரோனா வைரஸால் இந்தியாவிற்கு மிகப் பெரிய சவால் உருவெடுத்துள்ளது. இந்நிலையில் இந்தியாவிற்கும் எங்களது சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையிலும் இந்தியர்களுக்கு நம்பிக்கை மற்றும் வலிமையை அளிக்கும் வகையில் இந்தியாவின் மூவர்ணக் கொடியை எங்களது மேட்டர்ஹான் மலைச் சிகரங்களில்  ஒளிரச் செய்துள்ளோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ALSO READ  உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியல்... முதல் நாடு எது ??இந்தியன் இடம் என்ன??

Gerry Hofstetter என்ற ஓவியகலை நிபுணர் மாட்டர்ஹான் மலைச்சிகரத்தில் 14,692 அடி உயரத்திற்கு இந்தியாவின் மூவர்ணக் கொடியை ஒளிரச் செய்து இருந்தார். இதனை Gabriel Perren என்ற புகைப்படக் கலைஞர் புகைப்படம் எடுத்துள்ளார்.

Gerry Hofstetter

இந்தப் புகைப்படங்களை சுவிட்சர்லாந்தில் உள்ள இந்திய வெளியுறவுத் துறையில் பணியாற்றி வரும் கர்லீன் கௌர் IFS (Gurleen Kaur) தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்:-

ALSO READ  ஆச்சரியம்….ஆனால் உண்மை….இந்த நாட்டு கடிகாரத்தில் மட்டும் 11 எண்கள் தான் இருக்கு….

இதேபோல இந்த மலைச்சிகரத்தில் கொரோராவிற்கு எதிராக போராடி வரும் பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகளின் கொடிகளையும் இந்த ஸெர்மாட் நகரில் உள்ள மேட்டர்ஹான் மலைச்சிகரத்தில் ஒளிரச் செய்தது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சிறையில் கைதிகள்-காவலர்கள் இடையே மோதல்…8 பேர் உயிரிழப்பு…24 பேர் காயம்….

naveen santhakumar

மானை தன் பிடியில் இறுக்கி உணவாக்க துடித்த மலைப் பாம்பு… கடைசியில நடந்த ட்விஸ்ட்!! 

naveen santhakumar

தகதகவென எரிந்த தங்க சுரங்கம்…சோகத்தில் மக்கள்..!!

naveen santhakumar