உலகம்

டிக்டாக் நிறுவனத்தை செப்டம்பர் 15ம் தேதிக்குள் விற்பனை செய்யாவிட்டால் நடவடிக்கை- ட்ரம்ப் அறிவிப்பு…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்:-

டிக்டாக் நிறுவனத்தை செப்டம்பர் 15ம் தேதிக்குள் ஏதேனும் ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு விற்காவிட்டால், அமெரிக்காவில் அதற்கு தடை விதிக்கப்படும் என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.

இந்தியாவை தொடர்ந்து டிக்டாக் செயலியின் செயல்பாட்டை அமெரிக்காவில் தடை செய்ய ட்ரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். கொரோனா வைரஸ் அமெரிக்காவில் பரவ ஆரம்பித்தது முதலே சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் வர்த்தக போர் உச்சத்தை அடைந்துள்ளது. இதை தொடர்ந்து இரு நாடுகளும் மாற்றி மாற்றி குற்றம் கூறி வருகிறார்கள். 

ALSO READ  வாயில் சிக்கிய மவுத் ஆர்கன்… TikTok -கினால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

இந்நிலையில், டிக்டாக் நிறுவனத்தை கைப்பற்றுவது தொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவன சிஇஓ சத்ய நாதெள்ளா, ட்ரம்ப்புடன் ஆலோசனை நடத்தினார்.

அதோடு அமெரிக்காவில் டிக்-டாக் செயல்பாடுகளை மேற் கொள்ளும் உரிமையை தங்களுக்கு விற்பனை செய்து விடும்படி டிக்-டாக் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான பைட் டான்ஸ் (Byte Dance) நிறுவனத்திடமும் மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதை தொடர்ந்து, டிக்டாக் நிறுவனத்தை விலைக்கு வாங்குவது குறித்து ஆய்வு செய்து வருவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்தது. 

ALSO READ  அமெரிக்காவிற்குள் ஐரோப்பியர்கள் வர ட்ரம்ப் தடை விதிப்பு.....

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், செப்டம்பர் 15ம் தேதிக்குள் மைக்ரோசாப்ட் அல்லது ஏதேனும் ஒரு நிறுவனத்திற்கு, பைட் டான்ஸ் நிறுவனம் டிக் டாக் செயல்பாட்டை விற்க வேண்டும் அல்லது அதற்கு தடை விதிக்கபடும் என தெரிவித்துள்ளார்.

மொத்தத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் டிக்டாக் நிறுவனத்திற்கு ஆறு வாரங்கள் கெடு விதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மோடி எங்களுடைய பிரதமர் : பாகிஸ்தான் மந்திரிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதிலடி

Admin

டோக்கியோ ஒலிம்பிக் 2020 நிறைவடைந்தது – பதக்க பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்தது – இந்தியாவுக்கு 33 வது இடம்

News Editor

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சத்தமாக பேசிய 5 பேரை சுட்டுக்கொன்ற ரஷ்யர்:-

naveen santhakumar