உலகம்

ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்தநாள் இன்று.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

யார் இந்த ஜியோவன்னி டொமினிகோ காசினி..?

ஜியோவன்னி (Giovanni) அல்லது ஜியோவான் (Giovan) அல்லது ஜியான் (Gian) டொமினிகோ காசினி (Domenico Cassini)  என்றழைக்கப்படுபவர். 

ஓர் இத்தாலிய வானியலாளரும் கணிதவியலாளரும் பொறியியல் வல்லுனரும் ஆவார். 

இவர் 8 ஜூன் 1625 பெரினால்டோவில் பிறந்தார். பெரினால்டோ அப்போது நைசு கவுண்டியில் இம்பீரியாவுக்கு அருகில் சாவோய் துச்சியின் பகுதியாக இருந்தது .

இவர் தன் வானியல், பொறியியல் பங்களிப்புகளுக்காகப் பெயர்பெற்றவர். இவர் சனிக்கோளின் நான்கு துணைக்கோள்களைக் கண்டுபிடித்தார். 

இவர் கண்டறிந்து உலகத்திற்கு கூறியவை:-

1666 ஆம் ஆண்டு இவர் செவ்வாய் கிரகத்தை தொடர்ந்து ஆராய்ந்து செவ்வாய் கிரகத்தின் ஒரு நாள் என்பது 24 மணி நேரம் 40 நிமிடங்கள் என்பதை கண்டறிந்தார். (செவ்வாய் கிரகத்தில் ஒரு நாள் என்பது 24 மணி நேரம் 37 நிமிடங்கள் 22.6 வினாடிகள் ஆகும்).

ALSO READ  அபுதாபியில் கொரோனா பரிசோதனைக்கு கட்டணம் குறைப்பு:

1668 ஆம் ஆண்டு இவர் வியாழன் கிரகத்தின் துணைக் கோள்களைக் கண்டு அவற்றின் நிலைகளை கண்டறிந்து அட்டவணைப்படுத்தினார். இவரது இந்த அட்டவணையைக் கொண்டு டேனிஷ் வானியலாளர் ஒலே ரோமர் ஒளியின் வேகம் மிக மிக வேகமானது என்று கண்டறிந்தார் ஆனால் அதேவேளையில் ஒளியின் வேகம் முடிவிலி இல்லை என்பதையும் கூறினார்.

சூரிய குடும்பத்தில் ஆறாவது இடத்தில் உள்ள சனி கிரகம், மற்ற கிரகங்களை விட மிகவும் வித்தியாசமானது. அந்த கிரகத்தை சுற்றியுள்ள வளையங்கள் அதற்கு ஒரு தனித்தன்மையை ஏற்படுத்தி உள்ளது. சனி கிரகத்தை சுற்றி வளையங்கள் உள்ளதை, 1675ம் ஆண்டு ஜியோவானி டொமினிகோ காசி என்ற விண்வெளி ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்தார்.

ALSO READ  விண்வெளியில் சினிமா படப்பிடிப்பு: ரஷ்ய விஞ்ஞானிகள் ஆய்வு

சனிக்கோள் வளையங்களின் பிரிவுகளையும் இவர்தான் கண்டார் எனவே இவரது நினைவாகப்  சனிக்கோள் வளையங்களின் பிரிவுகளுக்கு இவரது பெயர் இடப்பட்டது. இவர்தான் முதன்முதலில் பிரான்சின் இடவியல் வரைபடம் (Topographic map) திட்டத்தை மேற்கொண்டு வரைந்தார்.

இறப்பு:-

மாபெரும் கணிதவியலாளர் வானவியல் வல்லுனருமான ஜியோவன்னி 14 செப்டம்பர் 1712 மறைந்தார்.

கௌரவம்:-

இவரது நினைவாக 1997 இல் ஏவப்பட்ட விண்கலத்திற்கு காசினி என்று பெயர் இடப்பட்டது. இக்கலம் சனி கிரகத்தை சுற்றிவந்தது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆங் சான் சூகியை விடுதலை செய்யக்கோரி ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தல் :

naveen santhakumar

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் ஆண்டு கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு

News Editor

பெயர் மாறும் ‛பேஸ்புக்’… புதிய பெயர் என்ன?

naveen santhakumar