இந்தியா

அம்பன் சூப்பர் புயலுக்கு பிறகு ஒடிசா தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து கிடக்கும் கனரக வாகனங்கள்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புவனேஸ்வர்:-

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸுக்கு எதிராக போராடி வரும் வேளையில் நேற்று வங்கக்கடலில் உருவான அம்பன் புயல் மேற்கு வங்கம் ஒடிசா ஆகிய மாநிலங்களில் பெரும் சேதத்தை விளைவித்தது.

1999 ஆம் ஆண்டிற்குப் பிறகு வங்கக்கடலில் உருவான சூப்பர் புயலான அம்மன் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் தலைகீழாக புரட்டிப் போட்டது மிகப்பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தியது. 

ALSO READ  முகக்கவசம் அணியாவிட்டால் ஒரு லட்சம் அபராதம்; வெளியே சுற்றினால் இரண்டு ஆண்டு சிறை- அரசு அதிரடி….
courtesy.

இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த கனரக வாகனங்கள் நேற்று அடித்த சூறாவளி காற்றில் தலைகீழாக கவிழ்ந்து கிடக்கும் வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 6 மணி நேரத்திற்கு 86 கிலோ மீட்டர் முதல் 120 கிலோமீட்டர் வரை வேகத்தில் இந்தப் புயல் தாக்கியது இதனால் பெருமளவில் மரங்கள் வேரோடு சாய்ந்தன ஏராளமான மின்கம்பங்கள் பிடிங்கி வீசப்பட்டது உலகின் மிகப்பெரிய சதுப்பு நிலமாக கருதப்படும் சுந்தரவன பகுதியில் இப்புயலால் பெருமளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

ALSO READ  பொதுத்தேர்வு கேள்வித்தாளை Tik-ToKல் வெளியிட்ட மாணவன்

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மிகச்சரியாக முன்கணிப்பு செய்ததால் மிகப்பெரிய உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கங்கையில் மிதந்த குழந்தை.. .!

naveen santhakumar

இந்தியாவில் மீண்டும் 4 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு !

News Editor

போதைப் பொருள் வழக்கு: ஷாரூக் கான் மகன் ஆர்யன் கானுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

naveen santhakumar