இந்தியா

ராணுவத்தினர் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட 89 செயலிகள் எவை??? 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் பேஸ்புக், இன்ஸ்டாகிரம் உள்ளிட்ட 89 மொபைல் செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என இந்திய ராணுவம் வலியுறுத்தி உள்ளது.

பாதுகாப்பு மற்றும் முக்கியமான தரவுகள் கசிவதை தடுக்கும் நோக்கில் வரும் 15ம் தேதி முதல் அமலுக்கு வரும், இந்த ஒழுங்குமுறையை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

தடை விதிக்கப்பட்ட 89 செயலிகள்:-

பாகிஸ்தான் மற்றும் சீன உளவு அமைப்புகளால் இந்திய ராணுவத்தை சேர்ந்தவர்கள், சமூக வலைதளங்களில் அதிகளவில் கண்காணிக்கப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

ALSO READ  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ப்ரியா பவானி சங்கரின் பதிவு…!

முன்னதாக தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 பிரிவு 69 A-ன் கீழ் தேசிய பாதுகாப்பு நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய (Prejudicial) வழி என்று 59 சீன செயலிகள் சமீபத்தில் தடை செய்யப்பட்ட நிலையில், முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட செயலிகளை ராணுவ அதிகாரிகள் பயன்படுத்த வேண்டாம் என வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  வங்கதேசத்தை உருவாக்கியவர்; மெட்ராஸ் ரெஜிமென்டை நேசித்தவர்!- ஃபீல்டு மார்ஷலாக நியமிக்கப்பட்ட முதல் இந்திய ராணுவ தளபதி... 

பிரபல செய்தி செயலியான Daily Hunt,  வீடியோ கான்பரன்சிங் செயலியான Zoom, மொபைல் எண்களை கண்டறியும் TrueCaller உள்ளிட்ட செயலிகளும் இந்த தடை பட்டியலில் உள்ளது.

இவற்றில் பல செயலிகள் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வீட்டின் மேற்கூரையைப் பிய்த்துக் கொண்டு விழுந்த மான்- வைரலாகும் வீடியோ…

naveen santhakumar

Remove Chins Apps-ஐ நீக்கியது செய்தது கூகுள் பிளே ஸ்டோர்…

naveen santhakumar

கொரோனா மூன்றாவது அலையை தடுக்க இதை செய்தால் போதும்.. அரவிந்த் கெஜ்ரிவால் !

News Editor