இந்தியா

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று; தொடரும் உயிரிழப்பு..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் என்ற நோய்க்கிருமி மாற்றங்கள் அடைந்து புதிய வகையாக உருமாறும் திறன் கொண்டதாக முன்பு எச்சரித்திருந்தனர் ஆய்வாளர்கள். 

 இந்நிலையில் உலகம் முழுவதும் 2-வது கட்ட கொரோனா அலை, அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் கோர முகத்தை காட்டி வருகிறது. இதனை தடுக்க பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இந்தியாவின் மற்ற மாநிலங்களில் கொரோனா பரவளின் தாக்கம் குறைந்திருந்தாலும் மகாராஷ்டிரா, மாநிலத்தில் மட்டும் தொடர்ந்து அதிகரித்துகொன்டே செல்கிறது. இங்கு 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று 2,629 பேருக்கு  கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 2,685 பேருக்கு  கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது.

ALSO READ  மகளிர் தின ஸ்பெஷல்; பிங்க்காக மாறிய ரயில்நிலையம்..!

இதன் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,27,833 ஆக அதிகரித்துள்ளது. 44,386 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். மேலும், இன்று 42 பேர் மரணமடைந்துள்ள நிலையில் 51,862 பேர்  கொரோனா  தொற்றால் மொத்தமாக மரணமடைந்துள்ளனர். அதனையடுத்து இன்று மட்டும் 1,770 பேர்  கொரோனா  தொற்று குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமானவர்களின் எண்ணிக்கை 19,30,274 ஆக உயர்ந்துள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பா.ஜ., தலைவர் இல.கணேசன் மணிப்பூர் கவர்னராக நியமனம்

News Editor

“விரைவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி” – எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா …!

naveen santhakumar

நிலவில் பத்திரமாக தரை இறங்கிய சந்திராயன்2 ரோவர்- சென்னை இன்ஜினியர்… 

naveen santhakumar