சினிமா

“மஞ்சனத்தியாக மாறிய பண்டாரத்தி”; கர்ணன் படத்தின் பிரச்சனையை முடித்து வைத்த படக்குழு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாரி செல்வராஜ்  நடிகர் தனுஷை வைத்து “கர்ணன்” என்ற படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தில் ராஜீஷா விஜயன், லால், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘கர்ணன்’ படத்தினை தாணு தயாரித்து தயாரித்துள்ளார். படத்தின் அணைத்து பணிகளும் முடிந்துள்ள நிலையில் படக்குழு படத்தின் இறுதி கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

கர்ணன் படம் ஏப்ரல் 9 தேதி வெளியாகும் என அறிவிக்கப்ட்டுள்ள நிலையில்  படத்தை விளம்பரம் படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது படக்குழு. அண்மையில் வெளியான “கண்டா வரச்சொல்லுங்க, பண்டாரத்தி புராணம், திரௌபதையின் முத்தம்  ஆகிய  பாடல்கள்  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்று படத்தின் மீதான எதிர்பார்புகளை கூட்டியுள்ளது.

இந்நிலையில் மதுரையை சேர்ந்த பிரபு என்பவர் கர்ணன் படத்தை வெளியிட தடை கோரி உயர்நீதி மன்ற மதுரை கிளையில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் “கர்ணன்” படத்தில் இடப்பெற்றுள்ள “பண்ணாடர்த்தி” பாடல் குறிப்பிட்ட சமுதாயத்தினரை காயப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதால் அந்த பாடலை படத்தில் இருந்தும் யூடியூபில் இருந்தும் நீக்க வேண்டும், அதுவரை “கர்ணன்” படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

ALSO READ  முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா ஜனனி ...!

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமைர்வு திரைப்பட தணிக்கை குழு தலைவர், கர்ணன் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், படத்தின் தயாரிப்பாளர் தாணு, பண்டாரத்தி பாடலை வெளியிட்ட யூடியூப் சேனல் ஆகியோர் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் நோடீஸ் அனுப்பியது.

இந்நிலையில் கர்ணன் படத்தில் இடம் பெற்றுள்ள பண்டாரத்தி பாடலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் அறிவித்துள்ளார். அதில் பண்டாரத்தி புராணம் பாடலுக்கு ஏற்பட்டிருக்கும் விவாதத்தையும் வருத்தத்தையும் கோரிக்கையையும் முடித்து வைப்பதற்காக பண்டாரத்தியை மஞ்சனத்தி என்று மாற்றியுள்ளோம் என்று கூறியுள்ளார்.

ALSO READ  ராம் சரண், ஷங்கர் கூட்டணியில் புதிய படம்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

இத்தகவலை கர்ணன் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

#karnan #mariselvaraj #dhanush #karnantamilmovie #cinema #cineupdate #cinematrending #tamilthisai #maduraihighcourt #pandaraththi #Manjanaththi #karnanisback


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘பிரேமம்’ பட இயக்குநருடன் கைகோர்க்கும் நயன்தாரா 

News Editor

‘அரண்மனை 3’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு ! 

News Editor

சவுதாம்ப்டன் வரை சென்ற வலிமை அப்டேட்…!

naveen santhakumar