அரசியல்

முதல்வராகும் ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் வாழ்த்து !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த மாதம் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில் அதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. அதில் திமுக தனித்து 125 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் உதயசூரியன் சின்னத்தில் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக 4 தொகுதிகளிலும், விசிக 4 தொகுதிகளிலும், சி.பி.எம் மற்றும் சிபிஐ  தலா இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்க உள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணி 75 இடங்கள் பெற்று எதிர்க்கட்சி வரிசையில் அமையவுள்ளது. 

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வரும், அதிமுக  துணை ஒருங்கிணைப்பாளருமான  எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்க உள்ள திரு மு.க ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

ALSO READ  கடுமையாகும் கட்டுப்பாடுகள்; தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிப்பு..!

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு: ஓ.பன்னீர் செல்வம் மேல்முறையீடு..

Shanthi

பாகிஸ்தானை பத்தே நாட்களில் வீழ்த்த முடியும் : பிரதமர் மோடி பேச்சு

Admin

போராட்டம் வெடிக்கும்… மத்திய அரசை எச்சரித்த முத்தரசன்!

naveen santhakumar