தமிழகம்

திமுக திட்டங்களும், கல்வெட்டுகளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது; அதிமுக மீது மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு ! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை சைதை தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் மா சுப்பிரமணியன் அவர்கள் சைதாப்பேட்டை பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

 அப்போது பேசிய அவர் இன்று காலை சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் உள்ள பெயர் பலகையை உடைத்து எறியும் ஒரு காணொளி யானது பரபரப்பாக சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

அந்த செயலை செய்த நவ சுந்தர் சுரேந்திரன் ஆகிய இரண்டு நபர்கள் திமு கழகத்தை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் கழகத்தின் எந்தவித பொறுப்பிலும் இல்லாத சாதாரண உறுப்பினர்கள்தான் என்றும், அவர்கள் தளபதி மு.க ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ALSO READ  இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா தொற்று !

அதுமட்டுமில்லாமல் அவர்கள் மீது காவல்துறையில் பொது சொத்துக்களை சேதம் விளைவிக்கும் பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டு உள்ளது எனவும், அவர்கள் கிழித்து எறிந்த விலை பட்டியல் மற்றும் பெயர் பலகை அதே இடத்தில்
மீண்டும் ஒட்டப்பட்டுள்ளது.

அவர்கள் கிழித்து எறிந்த பெயர் பலகைகள் மீண்டும் ஓட்டும் வீடியோ தனது தனிப்பட்ட கணக்கிலும் சமூகவலைதளத்தில் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. 2011 முதல் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் திமுக சார்பில் வைக்கப்பட்ட பல்வேறு திட்டங்களின் கல்வெட்டுகளில் அடித்து நொறுக்கப்பட்டன இன்று வரை அதை சரி செய்யப்படாமல் சென்னையின் பல இடங்களில் சாட்சியாக உள்ளன.

ALSO READ  கள்ளக்குறிச்சி சம்பவம் - அரசின் உத்தரவை மீறிய பள்ளிகள்…

தி.மு.கவின் பெயரை பயன்படுத்தி அராஜக செயலில் ஈடுபடுவார்கள் எவருக்கும் தளபதி ஸ்டாலின் துணை நிற்க மாட்டார் என்பதற்கு உறுதியாகவே இந்த செயல் உள்ளது எனவும் அதற்கு சாட்சி ஆகவே இந்த செய்தியாளர் சந்திப்பு எனவும் கூறினார். சென்னை மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் கண்டிப்பாக திமுக தலைவர் தளபதி ஸ்டாலின் உறுதியளித்தபடி நிறைவேற்றப்படும் எனக் கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அதிமுக வினர் மீது போடப்படும் பொய் வழக்குகளை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்

News Editor

தமிழகத்தில் டிசம்பர் இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் – அமைச்சர் கே.என்.நேரு தகவல்

naveen santhakumar

நிவர் புயல்…..பாதிப்பு எப்படி?????

naveen santhakumar