அரசியல்

கமலின் தோல்விக்கு மறைமுகமாக செயல்பட்டார் மகேந்திரன் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாக கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் மகேந்திரன். மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவராக இருந்து வந்த மகேந்திரன் நேற்று தன் பதவியை ராஜினாமா செய்தார்.


இந்நிலையில் கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யத்தின் விவசாய அணி மாநில தலைவர் கூறுகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து டாக்டர் மகேந்திரனை விலக்க வேண்டும் என்று பலமுறை நாங்கள் கோரிக்கை விடுத்து இருந்தோம். இதனை ஏற்று தலைவர் கமல்ஹாசன் அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

 மேலும் மக்கள் நீதி மய்யத்தை ஒரு கார்ப்பரேட் நிறுவனமாக வழிநடத்தியவர் மகேந்திரன். மக்கள் நீதி மய்யத்தை மகேந்திரன் படுகுழியில் தள்ள பார்த்தார்., மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசனை தெற்கு தொகுதியில் தோற்கடிக்க வேண்டும் என்று அனைத்து கட்ட பணிகளையும் மறைமுகமாக பணியாற்றியவர் மகேந்திரன். 

ALSO READ  போலீசார் அனுமதி மறுத்ததால் ஸ்கூட்டரில் சென்ற பிரியங்கா காந்தி

தலைவரின்  வெற்றியை பறிக்க பாடுபட்ட பணிகளை கூட அவர் சிங்காநல்லூர் தொகுதியில் செய்ய வில்லை. அவரது எண்ணம் முழுக்க முழுக்க, கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் வெற்றி பெற கூடாது என மறைமுகமாக செயல்பட்டவர் மகேந்திரன். எனவே அவரை தூக்கி வீசி உள்ளதாக கூறினார் . 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சீன உளவு கப்பலின் தாக்கத்தை உன்னிப்பாக கண்காணிப்போம்..

Shanthi

தமிழக அரசு சார்பில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட நிவாரண பொருட்கள்!

Shanthi

ம.நீ.ம சார்பில் தேமுதிகவுக்கு அழைப்பு விடுத்தது எனக்கே தெரியாது; கமல்ஹாசன் பேட்டி !

News Editor