இந்தியா

கோவிட் 3வது அலை அக்டோபரில் உச்சம்: அலட்சியம் வேண்டாம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடில்லி:

‘கோவிட் 3வது அலை வரும் அக்டோபர் மாதத்தில் உச்சத்தை அடையலாம்’ என தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (என்.ஐ.டி.எம்.,) எச்சரித்துள்ளது.

உலகம் முழுதும் கடந்த 20 மாதங்களாக கோவிட் பெருந்தொற்று ஆட்டிப்படைத்து வருகிறது. நம் நாட்டில் கோவிட் முதல் அலை கடந்த ஆண்டு மார்ச்சில் துவங்கி, அக்டோபர் வரை இருந்தது; அதன்பின் படிப்படியாக குறையத் துவங்கியது.

இதனால், கோவிட் தடுப்பு விதிகளை பின்பற்றாமல் மக்கள் அலட்சியம் காட்டினர். இதன் விளைவாக, இந்தாண்டு மார்ச்சில் 2வது அலை பரவத் துவங்கியது. ஏப்ரல் மற்றும் மே மாதம் வரை பாதிப்பு அதிகமாக இருந்தது. தினசரி பாதிப்பு 4 லட்சத்தை கடந்தது. அதன்பின் பாதிப்பு படிப்படியாக குறைந்தது.

கோவிட் தொற்று குறைந்தாலும் இந்தியாவில், ‘கோவிட் 3வது அலை பரவும் அபாயம் உள்ளது’ என, டாக்டர்கள் மற்றும் சுகாதாரத் துறை நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

ALSO READ  ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி ஒரு முறை போட்டால் போதும் …..

குறிப்பாக, ‘கோவிட் 3வது அலை இந்த மாதம் துவங்கி, வரும் அக்டோபரில் உச்சத்தை எட்டும். தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வைரசால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது’ என, ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்தனர்.

What to Know About the Delta Coronavirus Variant

இதை உறுதிப்படுத்தும் வகையில், உள்துறை அமைச்சகத்தின் (எம்.எச்.ஏ.,) கீழ் செயல்படும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (என்.ஐ.டி.எம்.,) பிரதமர் அலுவலகத்திற்கு (பி.எம்.ஓ.,) சமீபத்தில் அளித்த அறிக்கையில், ‘கோவிட் -பெருந்தொற்றின் 3வது அலை வரும் அக்டோபர் மாதத்தில் உச்சத்தை அடையலாம்’ எனத் தெரிவித்துள்ளது.

ALSO READ  சிசிடிவியில் சிக்கிய அவலக் காட்சி….. குழந்தையை அடித்து உதைத்து கழுத்தை நெறித்த கொடூரத் தாய்:

கோவிட் தடுப்பில் மக்கள் காட்டிய அலட்சியம் தான், 2வது அலைக்கு வழிவகுத்தது. அதே தவறுகளை மக்கள் மீண்டும் செய்யத் துவங்கியுள்ளனர்.

முக கவசம் அணிதல், கிருமி நாசினியால் கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், கூட்டம் கூடுவதை தவிர்த்தல் உள்ளிட்ட தடுப்பு நடைமுறைகளை மக்கள் இன்னும் குறைந்தது ஓராண்டுக்காவது முழுமையாக பின்பற்ற வேண்டும்.

அப்போது தான் 3வது அலை பாதிப்பிலிருந்து தப்பிக்க முடியும்’ என, வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்திய குடிமக்கள் யார் என மத்திய அரசு விளக்கம்…

Admin

இந்திய – சீனா மோதல்: இந்திய ராணுவத்தினர் 20 பேர் பலி, 4 பேர் கவலைக்கிடம், சீன தரப்பில் 43 பேர்…

naveen santhakumar

சிறுமியை மீட்கும் முயற்சியில் விபரீதம்- சுவர் இடிந்து விழுந்து பலர் உயிரிழப்பு

naveen santhakumar