உலகம்

செம ஐடியா! எரிமலை சாம்பல் வைத்து செங்கற்கள் தயாரிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிலிப்பைன்ஸ் நாட்டில் எரிமலையில் இருந்து வெளியான சாம்பலை வைத்து செங்கற்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள டால் என்ற எரிமலை சில நாட்களுக்கு முன்பு வெடித்து சிதறியது. பினன் நகரில் 15 கி.மீ தூரத்துக்கு எரிமலை சாம்பல் படிந்துள்ளது. இதனால், இப்பகுதியிலிருந்து 70 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

அப்பகுதியில் இருந்த மக்கள் எரிமலை வெடிப்பின் போது வெளியான சாம்பலை சேகரித்து அரசிடம் ஒப்படைத்தனர்.

ALSO READ  ஆப்கானிஸ்தானுக்கு மீட்பு பணிக்கு சென்ற உக்ரைன் விமானம் கடத்தல்- ஈரான் கொண்டு செல்லும் பயங்கரவாதிகள் ?

இந்நிலையில் எரிமலையில் இருந்து வெளியான சாம்பலை வைத்து நாளொன்றுக்கு சுமார் 5000 செங்கற்களை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த செங்கற்களை வைத்து binan நகர மக்கள் தங்களின் வீடுகளை புனரமைக்க உள்ளனர்.

மேலும் மீதமுள்ள செங்கற்களை தனியார் நிறுவனங்களுக்கு விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தை எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க உள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆப்கானிஸ்தானில் திடீரென்று வெடிவிபத்து:

naveen santhakumar

துபாயில் இருந்து நாடு திரும்பும் வெளிநாட்டினர்- காரணம் என்ன?

naveen santhakumar

ஐஸ்லாந்தில் விசித்திரமான கருப்பு-வெள்ளை குதிரை… 

naveen santhakumar