உலகம்

ஆப்கானிஸ்தானுக்கு மீட்பு பணிக்கு சென்ற உக்ரைன் விமானம் கடத்தல்- ஈரான் கொண்டு செல்லும் பயங்கரவாதிகள் ?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள உக்ரைன் நாட்டு மக்களை மீட்க சென்ற உக்ரைன் விமானம் மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளது.

Ukraine plane crash in Iran

ஆப்கனை தலிபான்கள் கைபற்றிய பிறகு காபூலில் சிக்கிய மக்களை ஏற்றிக் கொண்டு சென்ற உக்ரைன் நாட்டு விமானம் நடுவானில் ஆயுத மேந்திய பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது. அந்த விமானம் ஈரான் நோக்கி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து அங்கிருந்த தங்கள் நாட்டு மக்களை அமெரிக்கா, இந்தியா, உக்ரைன் உள்பட பல்வேறு நாடுகள் தங்கள் விமானங்களை அனுப்பி மீட்டு வருகின்றன.

ALSO READ  பெண் செய்தியாளர் பரிதாபமாக சுட்டுக்கொலை:

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டு மக்களை மீட்க உக்ரைன் விமானம் ஒன்றை ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தது.

அந்த விமானம் காபூலில் இருந்து உக்ரைன் நாட்டு மக்களை மீட்டு சொந்த நாடு திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது, விமானத்தில் இருந்த ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் அடங்கிய கும்பல் விமானத்தை கடத்தியது. விமானம் தற்போது ஈரான் நாட்டிற்கு கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து உக்ரைன் அரசு விசாரணை நடத்தி வருகிறது.

ALSO READ  ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் :

இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பது குறித்தும், இதில் தலிபான்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து உக்ரைன் அரசு விசாரணைக்கு பின்னர் தெரியவரும். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமெரிக்காவில் காலிஸ்தான் கொடியை காந்தி சிலை மீது போர்த்தி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு:

naveen santhakumar

அமீபாவால் உயிரிழந்த சிறுவன்:

naveen santhakumar

நீதிமன்றத்தை அவமதித்த வழக்கில் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக்கு 15 மாதங்கள் சிறை :

Shobika