இந்தியா

நேபாளத்தில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பீகார் மாநிலத்தில் இருந்து 5 பேர் காரில் நேபாளத்தின் காத்மண்டுவுக்கு புறப்பட்டு சென்ற போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 இந்தியர்கள் உயிரிழந்தனர்.

பீகார் மாநிலத்தில் இருந்து 5 பேர் காரில் நேபாளத்தின் காத்மண்டுவுக்கு புறப்பட்டு சென்றனர். இவர்கள் சென்ற கார் இன்று அதிகாலை நேபாளத்தின் மஹ்மதி மாகாணம் சிந்த்ஹுலி மாவட்டத்தில் உள்ள மலைப்பங்கான பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் 500 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த 4 இந்தியர்கள் உயிரிழந்தனர்.

மேலும், ஒருவர் படுகாயமடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் உயிரிழந்த 4 இந்தியர்களின் உடலை மீட்பதில் சிக்கல் நிலவுவதால் நேபாள ராணுவத்தின் உதவி கேட்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த அனைவரும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இது குறித்து இந்திய வெளியுறவுத்துறையிடம் நேபாள அரசு தகவல் கொடுத்துள்ளது.


Share
ALSO READ  பிரபல பாடகி நித்யஸ்ரீக்கு விபத்தில் தலையில் அடி:
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியின் பரிசோதனை வெற்றிகரமாக முடிந்தது :

naveen santhakumar

பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு..!

naveen santhakumar

மாதவிடாய் ஏற்பட்ட பள்ளி மாணவிக்கு உதவிய மாணவன்- தாய் பாராட்டு.

naveen santhakumar