இந்தியா

கேரள அரசை கெளரவித்த ஐக்கிய நாடுகள் சபை…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜெனிவா:-

ஐக்கிய நாடுகள் சபையின், பொது சேவை தினக்கொண்டாடத்தின் (Public Service Day) போது, கொரோனா (Covid-19) வைரஸை திறம்பட கையாண்டதற்காக கேரள அரசு கெளரவிக்கப்பட்டது. 

இந்த விழா வீடியோ கான்பிரன்சிங் வாயிலாக நடைப்பெற்றது. இதில் ஐ.நா.சபையின் பொது செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா உட்பட திறம்பட செயல்பட்டு கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தியதற்காக அனைத்து தலைவர்களும் பாராட்டப்பட்டனர்.

ALSO READ  என்ன சொல்றீங்க… கேஸ் விலை உயர்வின் பின்னணி இதுதானா?

இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஷைலஜா:-

நிபா வைரஸ் பரவல், 2018 மற்றும் 2019 ல் ஏற்பட்ட வெள்ளம் ஆகியவற்றை கையாண்டதில் கிடைத்த அனுபவமே கொரோனா வைரசை கையாள உதவியாக இருந்தது என தெரிவித்தார்.

மேலும் சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது முதலே தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கினோம். மேலும் உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவுறுத்திய அனைத்து தற்காப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றி கொரோனா தொற்று பரவும் விகிதத்தை 12.5 சதவீதத்திற்கு குறைவாக கட்டுபடுத்தினோம். இதுபோன்ற முன் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக ஒருவர் இறப்பு விகிதம் 0.6 சதவீதமாக கட்டுக்குள் வைக்க முடிந்தது என்று கூறினார்.

ALSO READ  ஐ.நா. வரை சென்ற சாத்தான்குளம் கொலை வழக்கு- முழு விசாரணை வேண்டும் ஐ.நா. பொதுச்செயலாளர்....

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘ஆன்லைன்’ வாயிலாக திருமணம் – உயர் நீதிமன்றம் அனுமதி

News Editor

100 மணி நேர போரட்டத்திற்கு பின் சிறுவன் மீட்பு!

Shanthi

பிளஸ் 2 மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண்? – சி.பி.எஸ்.இ விளக்கம்…!

naveen santhakumar