சினிமா

சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளை அள்ளிய அசுரன் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் ஜோடியாக நடித்து, கடந்த 2019-ம் ஆண்டு திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் அசுரன். இப்படத்தில் தனுஷ் இளைஞராகவும், வயதானவராகவும் இரு தோற்றங்களில் ரசிகர்களை மிரட்டி இருந்தார். கென் கருணாஸ், பசுபதி, பிரகாஷ்ராஜ், வெங்கடேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இப்படம் எழுத்தாளர் பூமணி எழுதியிருந்த ‘வெக்கை’ நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்கிருந்தது குறிப்பிடத்தக்கது. அண்மையில் 2019 ஆண்டிற்கான சிறந்த தமிழ் மொழி படத்திற்கான தேசிய விருது அசுரன் படத்திற்கும், சிறந்த நடிகருக்கான விருது தனுஷுக்கும் வழங்கப்பட்டுள்ளது. . 

இந்நிலையில், ஜப்பான் நாட்டில் ஒசாகா நகரில் நேற்றும்,நேற்று முன்தினமும் நடந்த ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் அசுரன் திரையிடப்பட்டது. இதனையடுத்து இவ்விழாவில் சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த படம், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கலை இயக்குநர் உள்ளிட்டப் பிரிவுகளில் அசுரன் படம் விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது.

ALSO READ  காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வருக்கு கொரோனா தொற்று !

#asuran #dhanush #vetrimaran #Tamilthisai #osaka #Japan #TamilThisai #tamilcinema #cineupdate #Cinemanews #cineupdate #nationalaward


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி; நடிகர் ரஜினி ட்வீட் ! 

News Editor

திரையில் நேரடியாக மோதும் ‘தல தளபதி’ படங்கள்..!கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

News Editor

“பூமி” படத்தின் டிரைலர் வெளியீடு..!

News Editor