சினிமா

பிரபல “கோல்டன் குளோப்” விழாவிற்கு இரண்டு தமிழ் நடிகர்களின் படங்கள் தேர்வு! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆஸ்கார் விருதிற்கு அடுத்தபடியாக, உலகத் திரையுலக கலைஞர்களால்  பெரிதும் மதிக்கப்படக்கூடிய மற்றும் கௌரவமாகக் கருதக்கூடிய விருது கோல்டன் குளோப் . இவ்விருது விழாவானது வருடந்தோறும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுவது வழக்கம்.

ஆங்கில படங்கள் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள பிற மொழிப்படங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு இதில் திரையிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அடுத்த வருடம் ஃபிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள 78-வது கோல்டன் குளோப் விருது விழாவிற்கு, இரு தமிழ்ப்படங்கள் தேர்வாகியுள்ளன. 

தமிழில் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று, தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் ஆகியப் படங்களும், மலையாளத்தில் வெற்றி பெற்ற ஜல்லிக்கட்டு உடன் தன்ஹாஜி, தி டிசிபல், ஈப் அலே ஓ, ஹராமி, ஜஸ்ட் லைக் தாட், ட்ரீ அண்டர் தி சன் ஆகியப் படங்களும் திரையிடப்பட இருக்கின்றன. 

ALSO READ  'கபடதாரி' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

இந்நிலையில், அசுரன் திரைப்படம் கோவா இந்திய சர்வதேச திரைப்படவிழாவில் திரையிட தேர்வாகியிருந்தததும், ஆஸ்கார் விருது தேர்வுக்கு ஜல்லிக்கட்டு படம் தேர்வாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உலகநாயகன் நடிக்கும் வித்தியாசமான பெயர் கொண்ட படம்…..பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பெயர் வெளியீடு…..

naveen santhakumar

மதம் மாறியதாக வதந்தி… விஜய் சேதுபதி கொடுத்த பதிலடி

Admin

‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் குறித்து ட்வீட் செய்த செல்வராகவன் !

News Editor