சினிமா

‘அஜித்’ பட ஸ்டெயிலை பின்பற்றும் விஜய் ஆண்டனி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

விஜய் ஆண்டனி முதல் முறையாக கிழக்கு கடற்கரை சாலை படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக இருந்து வந்தார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகிய “நான்” படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனையடுத்து சலீம், பிச்சைக்காரன், இந்தியா பாகிஸ்தான் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.

இதனையடுத்து இவரின் நடிப்பில் கோடியில் ஒருவன் படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ள நிலையில் பிச்சைகாரன் , காக்கி, தமிழரசன், அக்னீசிறகுகள் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். 

ALSO READ  'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் நடித்த டாக்டர் சேதுராமன் காலமானார்.....

இந்நிலையில் இவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2013 ஆம் ஆண்டு வெளியான விடியும் முன் இப்படத்தை இயக்கிய பாலாஜி கே.குமார் இயக்கும் புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் கதாநாயகியாக ரித்திகா சிங் நடிக்கவுள்ளார்.

ஆக்சன் திரில்லர் ஜானரில் எடுக்கப்படும் இப்படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் நடிக்கவுள்ளர். 2011 ஆம் ஆண்டு வெளியான மங்காத்தா படத்தில் நடிகர் அஜித் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ  எங்களை கருணை கொலை செய்துவிடுங்கள்; கரகாட்ட கலைஞர்கள் கண்ணீர் ! 

#Ajith #Manakaththa #VijayAntony #TamilThisai #Cinema #Cinemaupdate #CineNews #kollywood #Ajithkumar #RitikaSingh


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

’பீஸ்ட்’ அப்டேட் – சென்னையில் தொடங்கியது படப்பிடிப்பு …!

News Editor

இணையத்தில் வைரலாகும் மாஸ்டர் விஜய்-ன் ஐடி கார்டு….

naveen santhakumar

சிலம்பம் கற்று வரும் விஜே ரம்யா!…

naveen santhakumar