இந்தியா

ரக்‌ஷா பந்தன் தினத்தில் சகோதரிகளின் தியாகம்- நெகிழ்ச்சி சம்பவம் ..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தம்பிக்காக அவரது சகோதரிகள் இருவர் தங்கள் கல்லீரலை தானம் கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் படாயு பகுதியைச் சேர்ந்தவர் அக்சத். 14 வயது சிறுவனான அக்சத் மஞ்சள் காமாலை நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவரது கல்லீரல் செயலிழக்கும் நிலைமைக்குச் சென்றது. இது மட்டுமல்லாமல் 92 கிலோ எடையுடன் இருந்ததால் சிறுவன் உடல் பருமனாலும் அவதிப்பட்டு வந்தார்.

கல்லீரலை உடனே மாற்றியாக வேண்டும் என்றும் இல்லையென்றால் நிலைமை மோசமாகி சிறுவனைக் காப்பாற்ற முடியாமல் போகும் நிலை உருவாகும் எனவும் மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர்.

ALSO READ  காஷ்மீர் பிரச்சினைக்கு போர் ஒருபோதும் தீர்வு ஆகாது?

தம்பி மீது அதிக பாசம் வைத்திருக்கும் அவரது மூத்த சகோதரிகள் நேகா (29), பெர்னா (22) ஆகியோர் அவருக்கு கல்லீரலை தானமாக வழங்க முன்வந்தனர்.

ஒருவர் உடலில் ஒரேயொரு கல்லீரல் மட்டுமே இருக்கும் என்பதால் ஒருவர் மட்டுமே முழு கல்லீரலையும் தானம் செய்ய வாய்ப்பில்லை. அதன்படி இருவரும் பாதி பாதி கல்லீரலை எடுத்து அவர்களது தம்பிக்கு பொருத்தினர்.

ALSO READ  சிறந்த காவல் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விருது

டெல்லி அருகே குர்காவ்ன் நகரில் உள்ள மெதந்தா மருத் துவமனையில் சிறுவனுக்கு அண்மையில் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வாகனங்களில் பம்பர் பொருத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது : ஐகோர்ட் உத்தரவு

News Editor

21 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்க வாய்ப்பு:

naveen santhakumar

இரண்டு வருடத்திற்கு பிறகு நடைபெறும் குரூப் 2 தேர்வு ; தேர்வர்கள் மகிழ்ச்சி!

Shanthi