இந்தியா

இந்திய ராணுவத்தில் குதிரைப் படைகளுக்கு மாற்றாக இனி டாங்கிகள்.. 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடெல்லி:-

இந்திய ராணுவத்தில் உள்ள ஒரே குதிரைப்படை பிரிவு தனது குதிரைகளுக்கு ஓய்வு கொடுக்க முடிவு செய்துள்ளது.

இந்திய ராணுவத்தில் ஒரே குதிரைப்படை பிரிவான ஜெய்ப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 61ஆவது (61st Cavalry) படை பிரிவு தனது குதிரைகளுக்கு ஓய்வு கொடுக்க முடிவு செய்துள்ளது. இதற்கு பதிலாக T-72 டாங்கிகளை பயன்படுத்த முடிவு எடுத்துள்ளது.

T 72 Tank.

இந்த குதிரைப் படை ரெஜிமெண்டில் மொத்தம் 300 குதிரைகள் உள்ளன. இவற்றில் 200 குதிரைகள் ஜெய்ப்பூரில் உள்ள 100 குதிரைகள் டெல்லியில் உள்ளன.

கடந்த 25 ஆண்டுகளில் குதிரைப்படை பிறகு எந்த ஒரு ராணுவ நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. இந்த குதிரை படைப்பிரிவு போலோ விளையாட மற்றும் குதிரை சவாரி செய்வதற்கு மட்டுமே பயன்பட்டு வந்தது.

ALSO READ  சிக்கிம் எல்லையில் இந்திய-சீன ராணுவ வீரர்கள் இடையே திடீர் கைகலப்பு... சிலர் காயம்...

இதுகுறித்து கூறிய லெப்டினண்ட் ஜெனரல் ஷேகட்கர் (Shekatkar) :-

போலோ விளையாட்டுக்கள் விளையாடுவதும் குதிரை சவாரி செய்வதும் ராணுவத்தின் பணியல்ல. ஜனாதிபதியின் பாதுகாப்பு படையில் உள்ள குதிரைப்படைக்கு அரச வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வேலையாவது இருக்கிறது.

ஆனால் ராணுவ குதிரை படைக்கு இந்த வேலையும் இல்லை. மேலும் குதிரை ரெஜிமண்டின் பாரம்பரியத்தை விட வீரர்களின் நலனே முக்கியம். எனவேதான் இத்தகைய முடிவை எடுத்துள்ளோம் என்றார். 

ALSO READ  இந்திய ராணுவத்தின் புதிய Tour Of Duty திட்டத்திற்கு பிரணிதா பாராட்டு…

பல ஆண்டுகளாக குடியரசு தின அணிவகுப்பில் குதிரைப் படைகளுக்கு என்று தனி சிறப்பு உள்ளது.

இந்த குதிரை படை பிரிவில் போலோ விளையாட்டுக்கள் மற்றும் குதிரை சவாரி ஆகியவற்றில் 1 பத்மஸ்ரீ விருது, 10 அர்ஜுனா விருதுகள், 11 ஆசிய பகுதிகள் ஆகியவற்றில் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1953ம் ஆண்டு 61 ஆவது படைப்பிரிவு ஜெய்ப்பூரில் ஆரம்பிக்கப்பட்டது. முன்னர் சுதேச மாகாணத்தில் இருந்த குதிரைப் படை பிரிவு 1953 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் இணைத்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒரு நாளைக்கு 3 ‘சோப்’- 10 மணி நேரக் ‘குளியல்’ : விநோத பிரச்சனை

Admin

இளம்பெண்ணின் செயல் ; தீயாக பரவும் வீடியோ – விளக்கம் கேட்டு காவல்துறை நோட்டீஸ்

News Editor

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை: இஸ்லாமிய வழக்கறிஞருக்கு முதல் அழைப்பிதழ்… 

naveen santhakumar