இந்தியா

அடுத்த அதிர்ச்சி – வர்த்தக சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு உருளை விலை ரூ.101 அதிகரித்து ரூ.2,234க்கு விற்பனை செய்யப்படுகிறது.

lpg price get hiked by rupees 25 from july 1 | LPG PRICE HIKE: சமையல்  எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு | Business News in Tamil

கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வரும் நிலையில் இன்றும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கச்சா எண்ணெயின் விலை உயர்வு காரணமாக கேஸ் சிலிண்டர்களின் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 101 உயர்ந்து ரூபாய் 2,234.50 என விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு- இல்லத்தரசிகள் அதிருப்தி…!

இதன்படி 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒரே ஆண்டில் ரூ.770 உயர்ந்துள்ளது. முன்னதாக அக்டோபர் 6ஆம் தேதி ரூ.1865 ஆக இருந்த சிலிண்டர் விலை 2 மாதங்களில் ரூ.369 உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் சென்னையில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ரூ.710 ஆக இருந்தது. மாதம் மாதம் விலை அதிகரித்து, அக்டோபர் மாதத்தில் காஸ் சிலிண்டர் விலை ரூ. 915.50 ஆக நீடித்தது. தொடர்ந்து, நவம்பர் மாதத்தில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை.

ALSO READ  பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..

இதனிடையே வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு காரணமாக ஓட்டல்களில் உணவுப் பண்டங்களின் விலை உயரும் வாய்ப்பு உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியாவில் ஆப்பிள் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் அறிமுகம்

Admin

ஓமன் சுல்தான் காபூஸ் மறைவு- இந்தியா சார்பில் ஒரு நாள் அரசு விடுமுறை அறிவிப்பு

Admin

வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிப்பு !

News Editor