இந்தியா

மே.வங்கத்தை புரட்டி எடுத்த அம்பன் புயல்: வெள்ளத்தில் மிதக்கும் கொல்கத்தா விமான நிலையம்!..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொல்கத்தா:-

வங்கக்கடலில் சூப்பர் புயலாக உருவாகியிருந்த அம்பன் புயல் நேற்று கொல்கத்தா அருகே கரையை கடந்தது. ஆறு மணி நேரம் அடித்த சூறாவளி காற்றால் கொல்கத்தா விமான நிலையம் வெள்ளக்காடாக மாறியுள்ளது.

அம்பன் புயலால் கொல்கத்தாவில் உள்ள விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதைகள் (Runway), விமான நிறுத்துமிடம் (Hangar) ஆகியவை பெரும் சேதமடைந்துள்ளது. விமான நிறுத்துமிடம் மேற்கூரைகள் பிடுங்கி வீசப்பட்டுள்ளன.

வங்கக் கடலில் உருவாகி இருந்த சூப்பர் புயல் அம்பன் நேற்று  மேற்குவங்காளத்தில் கொல்கத்தா, மிட்னாபூர், ஹூக்ளி மற்றும் தெற்கு 24 பர்கானா  (South 24 Parganas) வழியாக கரையை கடந்து சென்றது.

வெள்ளத்தில் மிதக்கும் விமான நிலையம்.

120 கிலோ மீட்டர் வேகத்தில் அடித்த இந்த புயல் காற்றால் ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு பிடுங்கி வீசப்பட்டுள்ளது. ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்து உள்ளன. மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரையில் 12 பேர் வரை பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ALSO READ  முதல் முறையாக 6 மொழிகளில் IPL ஏலம் வர்ணனை

மேற்கு வங்கத்தில் அம்பன் புயலால் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் 1999 ஆம் ஆண்டு வங்கக் கடலில் உருவான சூப்பர் புயல் ஒடிசாவை தாக்கியதில் 10 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

CAA-விற்கு எதிரான வன்முறைகள் குறித்து உச்ச நீதிமன்றம் கவலை

Admin

இன்று முதல் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு கொரோனா தடுப்பூசி !

News Editor

1999 ஆம் ஆண்டிற்குப் பிறகு உருவாகியுள்ள சூப்பர் புயல்- விரைந்தது கடற்படை…

naveen santhakumar