இந்தியா

10ம் ஆண்டில் அடியெடுத்து வைத்த ‘snapdeal.com’ நகரின் வரலாறு தெரியுமா? …

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உத்தரபிரதேசத்திலுள்ள கிராமம் ஒன்றில் snapdeal நிறுவன அதிபர் செய்த உதவிக்காக அக்கிராம மக்கள் செய்த நன்றிக்கடன் 10 ஆண்டுகளை கடந்தும் இன்றும் அனைவரையும் வியக்க வைக்கும் நிகழ்வாகும்.

உத்தரபிரதேசத்தின் முசாபர் மாவட்டத்தின் சிவ் நகர் என்ற கிராமம் வறட்சியின் பிடியில் சிக்கி தவித்து வந்துள்ளது. மண்ணால் கட்டப்பட்ட வீடுகள், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இக்கிராம மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். தினமும் 2 மணி நேர மின்சாரம், குறிப்பிட்ட நேரம் எரியும் தெருவிளக்கு என பல இன்னல்களுக்கு நடுவே அவர்கள் வசித்து வந்துள்ளனர்.

இதனைப்பற்றி கேள்விப்பட்ட snapdeal நிறுவன அதிபர் குணால் பஹ்ல் கடந்த 2011ம் ஆண்டு அங்கு சென்று கிராம மக்களின் கஷ்டங்களை நேரில் பார்த்தார். தண்ணீர் இல்லாமல் இருப்பதை கண்ட அவர் உடனடியாக போர் போட முடிவு செய்து தேவையான இடங்களில் போர் போட்டி தண்ணீருக்கு ஏற்பாடு செய்தார். இதனால் அம்மக்கள் வாழ்வில் பெரும் மாற்றம் ஏற்பட்டது.

ALSO READ  பரோல் முடிந்து சிறை சென்றார் பேரறிவாளன்

இதற்கு கைம்மாறாக சிவ் நகர் என்ற பெயரை ‘snapdeal.com’ நகர் என்று மாற்றினர். இதனைக்கேட்டு பூரிப்படைந்த அந்நிறுவன அதிபர் மேலும் பல உதவிகளை செய்து வருகிறார்.

2011ம் ஆண்டு மாற்றப்பட்ட இந்த பெயர் 10ம் ஆண்டில் கம்பீரமாக அடியெடுத்து வைத்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பாய்ந்து வந்த புலி… சாதுரியமாக தப்பித்த நபர்

Admin

அமைச்சர் மீது மர்ம நபர்கள் குண்டு வீச்சு..! 

News Editor

மிகப்பெரிய காற்றாலை இறகினை கையாண்டு வஉசி துறைமுகம் சாதனை..

naveen santhakumar