இந்தியா

டோக்கியோ பாராலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்க பதக்கம் வென்ற சுமித் அன்டிலுக்கு எக்ஸ்யூவி700 காரின் கோல்டு எடிசனை பரிசாக வழங்கியது மஹிந்திரா நிறுவனம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புது டெல்லி

மஹிந்திரா நிறுவனம் இந்தியாவின் தங்க மகன் சுமித் அன்டிலுக்கு எக்ஸ்யூவி700 காரின் கோல்டு எடிசனை பரிசாக வழங்கி கௌரவித்துள்ளது.

இந்தியாவின் தங்க மகனுக்கு சூப்பரான பரிசை வழங்கிய மஹிந்திரா... இந்த காருக்காகதான் நிறைய பேர் தவம் கெடக்கறாங்க!

மஹிந்திரா நிறுவனம் புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள எக்ஸ்யூவி700 காரின் டெலிவரி பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.

வரும் 2022ம் ஆண்டு ஜனவரி 14 பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக 14 ஆயிரம் எக்ஸ்யூவி700 கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்வதற்கு மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது

Anand Mahindra to gift custom made XUV700 SUV to Paralympic Gold Medalist Sumit  Antil

டோக்கியோ பாராலிம்பிக் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியின் எஃப்64 பிரிவில் 68.55 மீட்டருக்கு ஈட்டி எறிந்து தங்க பதக்கம் வென்ற இந்தியாவின் சுமித் அன்டிலுக்கு எக்ஸ்யூவி700 காரின் கோல்டு எடிசனை மஹிந்திரா நிறுவனம் பரிசாக வழங்கியுள்ளது.

ALSO READ  சில மணி நேரம் தங்கி ஓய்வெடுத்து செல்ல நவீன பாட் ஓட்டல்கள் மும்பை ரயில் நிலையத்தில் திறப்பு

இதை குறிப்பிடும் வகையில், டெயில்கேட் மற்றும் ஃபெண்டரில் ‘68.55’ என்ற பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் ஈட்டி எறிதல் முத்திரையும் கொடுக்கப்பட்டுள்ளது. இவை தங்க நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் சுமித் அன்டிலின் சாதனை, ஹெட்ரெஸ்டுகள் மற்றும் முன் பக்க டேஷ்போர்டிலும் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  தேன்களில் கலப்படம் செய்யும் முன்னனி நிறுவனங்கள்…..அதிர்ச்சியளிக்கும் ஆய்வு தகவல்கள்…...
Anand Mahindra fulfilled the promise made to the Olympic gold medalists,  gifted a special XUV vehicle. Anand Mahindra gifts XUV700 to Neeraj Chopra  Paralympics gold winner Sumit Antil – pipanews.com

மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி700 புத்தம் புதிய காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில்பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்துள்ளனர் என்பதை பலரும் வியந்து பார்க்கின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் அமித்ஷா

Admin

141 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு

Admin

டெல்லி மாசுக்கு பாக். தான் காரணம்; உ.பி. அரசு – பாக். தொழிற்சாலைகளை தடை செய்ய சொல்றீங்களா உச்ச நீதிமன்றம்

naveen santhakumar