இந்தியா

நீர் நிலைக்குள் பாய்ந்த கார் – பிரபல நடிகை மரணம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரபல மராட்டி நடிகை ஈஸ்வரி தேஷ்பாண்டே உயிரிழந்த சம்பவம் அவரின் ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Schoking 25 Age Marathi Actress Ishwari Deshpande Dies In A Car Accident

மராத்தி மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் ஈஸ்வரி தேஷ்பாண்டே (வயது 25). இவர் கடந்த 15-ம் தேதி தனது காதலன் சுப்பம் டெஜ் (வயது 28) உடன் கோவாவுக்கு காரில் சுற்றுலா சென்றிருந்தார்.

Actress Ishwari Deshpande And Her Friend Shubham Dadge Dies In A Car  Accident - Filmibeat

அங்கு சில நாட்கள் தங்கிவிட்டு, நேற்று முன்தினம் இருவரும் மும்பை திரும்பியுள்ளனர். கோவாவின் அர்போரா கிராமத்திற்கு அருகில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், அருகில் உள்ள குட்டையில் மூழ்கியது.

ALSO READ  மாதவிடாய் ஏற்பட்ட பள்ளி மாணவிக்கு உதவிய மாணவன்- தாய் பாராட்டு.

காரில் இருந்து வெளியே வரமுடியாததால் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஈஸ்வரி தேஷ்பாண்டேவும் அவருடன் பயணித்த ஷூபம் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருந்த நிலையில், இந்த சம்பவம் திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ  ஜனவரி 31 வரை தடை நீட்டிப்பு… மத்திய அரசு அதிரடி முடிவு!

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர்கள் இருவரும் நள்ளிரவு விருந்துக்கு சென்று திரும்பி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதற்கு அடையாளமாக அவர்களது கை மூட்டுகளில் Wristband உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று !

News Editor

பூட்டன், மாலத்தீவிற்கு கொரோனா தடுப்பூசியை அனுப்பியது இந்திய !

News Editor

மகாராஷ்டிரா முழுவதும் செக்சன் 144 அமல்- உத்தவ் தாக்கரே…..

naveen santhakumar