இந்தியா

21 தீவுகளுக்கு இன்று பெயர்சூட்டும் விழா!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

21 தீவுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பரம் வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை இன்று சூட்டுகிறார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஜனவரி 23ஆம் தேதி பராக்கிரம தினமாக கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் இன்று நடைபெறும் பராகிரம திவாஸ் தினத்தையொட்டி, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் பெயர் சூட்டப்படாத 21 தீவுகளுக்கு, பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை பிரதமர் நரேத்திர மோடிசூட்டுகிறார். 2018 ஜனவரி வரை 20 பேர் இந்திய ராணுவத்தில் இருந்தும், ஒருவர் இந்திய விமானப்படையில் இருந்தும் பரம்வீர் சக்ரா விருதினை பெற்றுள்ளனர். அந்தமானின் வரலாற்று முக்கியத்துவத்தை மனதில் வைத்து நிக்கோபார் தீவுகள் நேதாஜியின் நினைவைப் போற்றும் வகையில், 2018 ஆம் ஆண்டு பிரதமரால் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் நீல் தீவு மற்றும் ஹேவ்லாக் தீவுகள் ஷாஹீத் தீவு மற்றும் ஸ்வராஜ் தீவு எனப் பெயர் மாற்றப்பட்டன. 21 தீவுகளில் அளவில் மிகப் பெரிய தீவுக்கு முதலில் பரம் வீர் சக்ரா விருதைப் பெற்றவரின் பெயர்களும், அடுத்தடுத்த அளவுள்ள தீவுகளுக்கு அடுத்தடுத்து பரம் வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களும் வைக்கப்படும் என்றும் தெரிவிக்கபட்டிருந்தது.

இந்நிலையில் மேஜர் சோம்நாத் ஷர்மா, நாயக் ஜதுநாத் சிங், மேஜர் பிரு சிங், ஆல்பெர்ட் எக்கா, மேஜர் ராமசுவாமி பரமேஸ்வரன், கேப்டன் விக்ரம் பத்ரா, லெப்டினென்ட் மனோஜ் குமார் பாண்டே உள்ளிட்டோரின் பெயர்கள் இந்த தீவுகளுக்கு வைக்கப்பட உள்ளன. இதுதொடர்பாக பிரதமர் அலுவலக அறிக்கையில், “நாட்டின் நிஜ வாழ்க்கை ஹீரோக்களுக்கு உரிய மரியாதை அளிப்பது எப்போதுமே பிரதமரால் அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றும் இந்த மனப்பான்மையுடன் முன்னோக்கிச் சென்று, தீவுக் குழுவில் உள்ள 21 பெரிய பெயரிடப்படாத தீவுகளுக்கு இப்போது பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
ALSO READ  கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பீகாரில் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது:

naveen santhakumar

ஸ்கிராப் பொருட்களில் தயாரிக்கப்பட்ட கலாம் சிலை

News Editor

இந்தியாவில் ஆப்பிள் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் அறிமுகம்

Admin