இந்தியா

உ.பி: ஊரடங்கு விதிமுறைகளை மீறி மாஸ்க் அணியாமல் சுற்றித்திரிந்து ஆடுகளை கைது செய்த காவல்துறை… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லக்னோ:-

உத்திரபிரதேச மாநிலத்தில் முகமூடி அணியாத ஆடுகளை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே பெக்கோங்கஞ்ச் பகுதியில் மாஸ்க் சாலையில் சுற்றிதிரிந்த ஆடுகளை காவல்துறையினர் கைது செய்து ஜீப்பில் ஏற்றி சென்று சிறையில் அடைத்தனர்.

இது குறித்த தகவலறிந்து காவல்நிலையம் வந்த ஆட்டின் உரிமையாளர், தன்னுடைய ஆட்டை விடுவிக்கும் படி காவலர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அப்போது சட்டங்களை கரைத்து குடித்த காவலர்கள் உங்களுடைய ஆடு, பொது முடக்கத்தை மீறி, சாலைகளில் சுற்றிதிரிந்ததாகவும், மேலும் முகமூடியும் அணியாததால் தான் கைது செய்து சிறையில் அடைத்ததாக கூறியுள்ளார். காவலர்களின் அதிபுத்திசாலிதனைத்து  கண்டு வாயடைத்து போனார் ஆட்டின் உரிமையாளர்.

கடைசியில் ஒருவழியாக ஆட்டின் உரிமையாளரை ஆடு இதுபோன்று பொதுவெளியில் சுற்றக் கூடாது என்று எச்சரித்து அட்டை பெற்றுக் கொண்டு செல்லுமாறு கூறினர்.

ALSO READ  இந்தியாவின் முதல் கொரோனா நோயாளிக்கு மீண்டும் கொரோனா தொற்று…!

இந்த சம்பவம் குறித்து அன்வர்கஞ்ச் காவல் நிலைய அதிகாரி சாய்ஃபுதின் பெக் இந்த சம்பவம் குறித்து கூறுகையில்:-

நாங்கள் ஆடு ஊரடங்கு விதிமுறையை மீறி மாஸ்க் அணியாமல் சுற்றியதற்காக கைது செய்யவில்லை. மாஸ்க் அணியாத நபர் ஒருவர் ஆட்டை தூக்கிக் கொண்டு சென்றார் அப்பொழுது போலீசாரை பார்த்துவிட்டு ஆட்டை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டார். இதையடுத்து நாங்கள் ஆட்டை காவல் நிலையத்திற்கு தூக்கிவந்து உரியவரிடம் ஒப்படைத்தனர்.

ALSO READ  உனக்கு மட்டுமல்ல உன் ஏரியாவுல எவனுக்கும் கல்யாணம் நடக்காது.. கொந்தளித்த மணப்பெண்....

இதனிடையே காவலர்கள் ஆட்டை ஜீப்பில் ஏற்றும் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. பல்வேறு தரப்பிலிருந்தும் காவலர்களின் செயல்களை விமர்சித்து வருகிறார்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அலிபாபா நிறுவனர் ஜாக்மாவுக்கு இந்திய நீதிமன்றம் சம்மன்! 

naveen santhakumar

மும்பை-புதுக்கோட்டை….மகனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க ஸ்கூட்டரில் பயணம் செய்த தம்பதி:

naveen santhakumar

மாஸ்க் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வந்தால் 1000 ரூபாய் அபராதம்…..

naveen santhakumar