இந்தியா

உலகின் இரண்டாவது பெரிய டேட்டா சென்டர் மும்பையில் திறப்பு… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மும்பை:-

உலகின் இரண்டாவது பெரிய தரவு மையத்தை (Data Center) மும்பையில் தகவல் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் திறந்து வைத்தார்.

காணொலி காட்சி வாயிலாக இதனைத் திறந்து வைத்த மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்  இதுகுறித்து கூறுகையில்:-

உலகின் இரண்டாவது பெரிய தரவு மையத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி. உலகத் தரத்திலான கட்டமைப்பை உருவாக்கியுள்ளது என்று ஹிராநந்தனி குழுமம் (Hiranandani Group)ஐ பாராட்டினார்.

Yotta NM1 எனப்படும் இந்த உலகின் இரண்டாவது பெரிய தரவு மையம் ஆசியாவின்  மிகப்பெரிய நான்காம் நிலை தரவு மையம் ஆகும். இது மும்பையின் பன்வெல் (Panvel) பகுதியில் அமைந்துள்ளது. இதனை காணொலி காட்சி வாயிலாக மராட்டிய முதல்வர் உட்தவ் தாக்கரே மற்றும் மத்திய எலக்ட்ரானிக்ஸ் தகவல் தொடர்பு மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் தொழிற்சாலை மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய் ஆகியோர் திறந்து வைத்தனர். 

ALSO READ  நடிகை கங்கனா ரணாவத் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்:

இந்த தரவு மையம் மும்பையின் பன்வெல் பகுதியில் ஹிராநந்தனி குழுமத்துக்குச் சொந்தமான ஹிராநந்தனி ஃபார்சூன் சிட்டியில் 600 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த மையத்தின் மூத்த திறன் 210 மெகாவாட் ஆகும். இதில் முப்பதாயிரம் ரேக்குகள் உள்ளன.

ALSO READ  வரலாற்றில் முதன்முறையாக இந்திய ரயில்வே நிகழ்த்திய மிகப்பெரிய சாதனை…


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நாளை ஒன்றிய அரசின் அமைச்சரவை கூட்டம்

News Editor

மிக குறைந்த விலையில் அறிமுகமாகும் ஜியோ லேப்டாப்?

Shanthi

திருப்பதியில் இனி நோ பிளாஸ்டிக் பாட்டில்.

naveen santhakumar