அரசியல்

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த தமிழ்நாடு முதல்வர்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக மக்கள் நீதிமய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அறிவித்தார். இதற்கு ஈ.வி.கே. இளங்கோவன் நின்றி தெரிவித்தார்.

இதனையடுத்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு வழங்கியுள்ள கமல்ஹாசனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளரான ஈ.வி.கே. எஸ் இளங்கோவன் அவர்களுக்குத் தமது ஆதரவை வழங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


Share
ALSO READ  சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவுக்கு  முரசு சின்னம் ஒதுக்கீடு !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அனைத்துக்கட்சி கூட்டத்திலிருந்து ‘அவசர அவசரமாக’ வெளியேறிய வானதி… பரபரப்பு பேட்டி!

naveen santhakumar

விருப்ப மனு அளித்தவருக்கு நாளைமுதல் நேர்காணல்; தேமுதிக தலைமை அறிவிப்பு !

News Editor

திமுக  கொங்கு மண்டலங்களில் முழுமையாக வெற்றி பெறும்…!

News Editor