தமிழகம்

சாலைகளை பயன்படுத்துவது பொதுமக்களின் அடிப்படை உரிமை- போட் கிளப் சாலைக்கு தடை விதிக்க மாநகராட்சி மறுப்பு..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

சென்னை மாநகரில் பெரும் பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான போட் கிளப் சாலைக்குள் வெளியாட்கள் நுழைவதை தடை விதிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறைக்கு கோரிக்கை போட் கிளப் சாலையில் வசிப்போர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் சாலைகளை பயன்படுத்துவது பொதுமக்களின் அடிப்படை உரிமை என்பதால் இந்த கோரிக்கைகள் ஏற்க முடியாது எனவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் G.பிரகாஷ் IAS கூறுகையில்:-

சென்னை மாநகரில்  வசிக்கும் ஒரு சிலருக்காக மாநகராட்சி சிறப்பு ஏற்பாடுகள் எல்லாம் செய்ய முடியாது. தவிர சாலைகள் அனைவருக்கும் பொதுவானது எனவே பொதுமக்களை பயன்படுத்தக் கூடாது என்று தடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.

சென்னை போட் கிளப் சாலையில் பெரிய செல்வந்தர்களான சன் டிவி அதிபர் கலாநிதி மாறன், அவரது சகோதரர் மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், பிசிசிஐ முன்னாள் தலைவர் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் அதிபர் என்.சீனிவாசன், டிவிஸ் குழும அதிபர்கள், டிடிகே, முருகப்பா மற்றும் எம் ஆர் எஃப் குழும அதிபர்கள் வசித்து உள்ளிட்ட பெரும் தொழிலதிபர்கள் வருகின்றனர்.

இங்குள்ள சாலைகள் நன்கு பராமரிப்பில் உள்ளதால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் பலரும், தினசரி நடைப்பயிற்சி மற்றும் ஓட்டப் பயிற்சியை மேற்கொள்வது வழக்கமாகும்.  தற்போது கொரோனா தொற்று அச்சம் நிலவுவதால் இங்கு வசிப்போர் யாரும் வீட்டை விட்ட வெளியே வருவதில்லை என்பதால் சாலைகள் காலியாக உள்ளன. எனவே பலரும் இங்கு நடைப்பயிற்சி மற்றும் ஓட்டப்பயிற்சி செய்து வருகின்றனர்.

ALSO READ  அதிக விலைக்கு விற்றால் உரிமம் ரத்து- ஆணையர் எச்சரிக்கை…!

இந்நிலையில் இந்த பகுதி வாசிகளின் சங்கம் கடந்த மே 27ஆம் தேதி அன்று சென்னை காவல்துறை ஆணையருக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது. 

அதில் சங்கத் தலைவர் ரவி அப்பாசாமி கையெழுத்திட்டுள்ள அந்த கடிதத்தில், குறிப்பிடபட்டதாவது:- 

“ஊரடங்கு நேரத்தில் இங்கு வசிக்காத பலரும் தங்கள் நடை மற்றும் ஓட்டப் பயிற்சிகளை செய்கின்றனர். அறிமுகமற்றோரின் வாகனங்கள் காணப்படுகின்றன. தற்போது கொரோனா பாதிப்பு அதிகமாகி வரும் வேளையில், இவர்கள் எங்கள் பகுதியில் பயிற்சிகள் செய்வது மிகவும் தவறானதாகும். இவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து வந்திருக்கவும் வாய்ப்புள்ளது. சமூக இடைவெளிக்கு எதிரானது. எனவே இந்த சாலை நுழைவாயிலில் ஒரு பெரிய கேட் அமைத்து சாலைக்குள் வெளியாட்கள் வருவதைத் தடை செய்ய வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த இந்தக் கோரிக்கையை சென்னை காவல்துறை ஏற்க மறுத்துவிட்டது.

ALSO READ  சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்த சமையல் மாஸ்டர் போக்சோ சட்டத்தில் கைது !

இதுகுறித்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியை தேவசகாயம் கூறுகையில்:-

போர்ட் லேக் ஏரியா என்பது பணக்காரர்களுக்கான பகுதி அல்ல உண்மையில் அது ஏழைகளுக்காக தானமாக வழங்கப்பட்ட பகுதி. போட் கிளப் பகுதிவாசிகள் இந்த கோரிக்கை எனக்கு ஆச்சரியத்தையும் திகைப்பை ஏற்படுத்தியது.

105 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த போட்டில பகுதி உண்மையில் சர் ஜான் டிமான்டி என்பவருக்கு சொந்தமானது அவர் தனது இறப்பிற்கு பிறகு கத்தோலிக்க திருச்சபைக்கு இந்த சொத்து சேர வேண்டும் என்று உயில் எழுதினார்.  19 ஜூலை 1820 முதல் இது கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்தாக மாறியது. 

உண்மையில் டிமான்டியால் ஏழைகள், அனாதைகள், விதவைகள்,மிகவும் பின்தங்கிய குடும்பங்கள் மற்றும் அறக்கட்டளை பள்ளிகள் ஆகியவற்றிற்காக இந்த இடம் தானமாக வழங்கப்பட்டது இது கிளாஸ் 31 இல் (Clause 31) கூறப்பட்டுள்ளது.

மேலும் கிளாஸ் 27இல் (Clause 27) குறிப்பிட்டுள்ளபடி இந்த இடத்தை யாராலும் விற்க முடியாது. 

எனவே போர்ட்ல பகுதிவாசிகள் சங்கத்திற்கு இந்த இடத்தை பொதுமக்கள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்க  அதிகாரம் இல்லை இன்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம் கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது…….

naveen santhakumar

இன்று முதல் அமலுக்கு வரும் இரவு நேர ஊரடங்கு !

News Editor

கௌசல்யாவிடம் ரூ.1 கோடிக்காக கேட்கப்பட்ட கேள்வி என்ன தெரியுமா?

Admin