தமிழகம்

கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து விஜயகாந்த் விமர்சனம்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவித்தார். மேலும், காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் மற்றும் வருகைப் பதிவை கணக்கில் கொண்டு மதிப்பெண் மதிப்பிடப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.

இந்த நிலையில், முதல்வரின் அறிவிப்பு தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்:-

ALSO READ  சுங்கச்சாவடியில் சொகுசுக்கார் தீப்பற்றி எரிந்தது:

அரசு ஒரு கொள்கை முடிவு எடுத்தால், அதில் உறுதியாக இருக்கவேண்டும். நாளும் ஒரு நிலைப்பாடு எடுப்பதை தவிர்க்க வேண்டும். அண்டை மாநிலமான தெலுங்கானா, ஐகோர்ட் கண்டணம், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு, ஆசிரியர்கள் எதிர்ப்புக்கு பிறகு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழக அரசு ரத்துசெய்திருப்பதை தேமுதிக வன்மையாகக் கண்டிக்கிறது. 

இதனால் மாணவர்கள்,பெற்றோர்கள், ஆசிரியர்கள் குழப்பமடைந்துள்ளனர். ‘கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்’ என்பது போல் ஹால்டிக்கெட், தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்தபிறகு,காலங்கடந்த முடிவை முதலிலேயே எடுத்திருந்தால், தேமுதிக வரவேற்றிருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ALSO READ  சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டடம் -2 பொறியாளர்கள் பணியிடை நீக்கம்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா பரவல்: சென்னை,கோவை, மதுரை உட்பட 5 மாநகராட்சிகளில் முழுமையான ஊரடங்கு அமல் – தமிழக அரசு…..

naveen santhakumar

நம்பிக்கையா, தைரியமா இருந்தா எல்லாரும் ஜெயிக்கலாம்..! பெருசா ஜெயிக்கலாம்..!

Admin

நாளை திறக்கப்படும் வண்டலூர் உயிரியல் பூங்கா!

Shanthi