தமிழகம்

கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய  அரசு பேருந்துக்கு அபராதம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதனை தடுப்பதற்கு மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அந்தவகையில்  தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி பேருந்துகளில் இருக்கைகள் மட்டும் பயணிகளை ஏற்ற வேண்டும் என்று அறிவித்து இருந்தது இந்த நிலையில் அரசு உத்தரவை மீறி பல்வேறு பகுதிகளில் அதிக பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது


அதன் ஒரு பகுதியாக சேலம் சுந்தர் லாட்ஜ் பகுதியில் துணை ஆட்சியர் சரவணன் மாநகராட்சி பணியாளர்களுடன் பேருந்துகளில் பயணிகள் அதிகளவில் ஏற்றப்பட்டு உள்ளதா அல்லது முகக்கவசம் அணிந்து உள்ளனரா என்று சோதனை மேற்கொண்டிருந்தார். அப்போது சேலத்தில் இருந்து ஆத்தூர்  சென்ற தனியார் பேருந்து அரசு அறிவித்ததை  விட அதிக பயணிகளை ஏற்றி வந்தது. அதேபோல அரசு பேருந்தும்  அதிக பயணிகளை ஏற்றி வந்தது. இந்த  இரு பேருந்துகளுக்கு தலா ஐந்தாயிரம் அபராதம் விதிக்கப்பட்டது, மேலும் பேருந்துகளில் முகக்கவசம் அணியாமல் இருந்த பயணிகளை எச்சரித்து கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தினார். 


Share
ALSO READ  காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. மறைவு
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்த சமையல் மாஸ்டர் போக்சோ சட்டத்தில் கைது !

News Editor

தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு !

News Editor

சேலத்தில் வெறிச்சோடிய வீதிகள்; புதிய கட்டுப்பாடுகள் அமல் !

News Editor