தமிழகம்

கன்னியாகுமரி மனநல காப்பகத்தில் 46 பேருக்கு கொரோனா தொற்று !

சீனாவின் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனையடுத்து இந்த வைரஸ் தற்போது மரபியல் மாற்றமடைந்து பல நாடுகளில் இரண்டாம் அலையை தொடங்கியுள்ளது கொரோனா வைரஸ். அந்தவகையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தனது இரண்டாவது அலையை தொடங்கிவிட்டது.

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் இந்தியா முழுவதும்  கொரோனா  தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் தற்போது 2வது அலையை தொடங்கியுள்ள நிலையில்  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த இரண்டு வாரங்களாக 2 ஆயிரத்தை கடந்து வருகிறது. இந்நிலையில கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் மனநல காப்பகத்தில் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் 15,300 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Related posts

என்னை ஃபாலோ செய்கிறார்கள்…..என் உயிரை காப்பாற்றுங்கள்…கதறும் ஜெ.தீபா….

naveen santhakumar

மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு பிரத்யேகமான ஏற்பாடு :

naveen santhakumar

இன்று முதல் பொங்கல் பண்டிகைக்கான பேருந்து முன்பதிவு தொடக்கம்:

naveen santhakumar