தமிழகம்

ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு; முதல்வரானார் மு.க.ஸ்டாலின் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 159 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிபெரும்பான்மையில் ஆட்சியை பிடித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க ஸ்டாலின் நாளை ஆளுநர் மாளிகையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.  

அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று கூறி மு.க.ஸ்டாலின் முதலமைச்சருக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் எடுத்துக்கொண்டார். இதனையடுத்து 33 அமைச்சர்களும் தங்கள் பதவியை ஏற்றுக்கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில், துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும், வைகோ, திருமாவளவன், ப. சிதம்பரம், முத்தரசன், கி. வீரமணி, வேல்முருகன், ஈஸ்வரன், காதர் மொய்தீன், கே.எஸ். அழகிரி, திருநாவுக்கரசர், சரத்குமார், கமல்ஹாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர்.

ALSO READ  கமல்ஹாசன் பிறந்தநாளுக்கு வனிதா விஜயகுமாரின் ஸ்பெஷல் கேக்:

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள் கடன் வசூலிக்க தடை- முதல்வர் பழனிசாமி….

naveen santhakumar

சொத்தை கேட்ட மகன்… தர மறுத்த தந்தைக்கு நேர்ந்த கொடூரம்

Admin

கலைஞரின் 98 வது பிறந்தநாள்: 5 நலத்திட்டங்கள் தொடக்கம்…! 

naveen santhakumar