சுற்றுலா தமிழகம்

தொடங்குகிறது திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் ..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் வருகிற 9ஆம் தேதி மாலை தொடங்குகிறது.

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிப்படுவதால் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்வார்கள்.

இந்நிலையில் இந்த மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் வருகிற 9ஆம் தேதி மாலை சுமார் 6.20 மணியளவில் தொடங்கி மறுநாள் 10ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் நிறைவு பெறுகின்றது. மேலும் பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்வதற்காக முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.


Share
ALSO READ  பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் குழந்தையின் சாட்சியம் மட்டுமே போதுமானது : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சிலைகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

naveen santhakumar

மதுரை: தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் தடை

naveen santhakumar

அதிகரிக்கும் கொரோனா பலி; உடலை அடக்கம் செய்யும் செலவை மத்திய அரசு ஏற்க வேண்டும் !  

News Editor