சுற்றுலா

மாமல்லபுரத்திற்கு மீண்டும் குளிரூட்டும் பேருந்துகள் இயக்கம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கோடை விடுமுறையை முன்னிட்டு அடையாறு – மாமல்லபுரம் இடையே மீண்டும் குளிரூட்டும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

தற்போது கோடை விடுமுறை என்பதால், மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்களை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், சென்னை புறநகர் பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. சென்னை – மாமல்லபுரம் இடையே, முட்டுக்காடு சுற்றுலா வளர்ச்சிக்கழக படகு குழாம், வடநெம்மேலி முதலைப்பண்ணை, திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில், கோவளம் நீலக்கொடி கடற்கரை போன்ற சுற்றுலா தலங்கள் உள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன் கோடை வெயில் தாக்கத்தின்போது வார இறுதி நாட்களில், சென்னை பிராட்வே, கோயம்பேடு, தியாகராய நகர் ஆகிய பகுதிகளிலிருந்து மாமல்லபுரத்திற்கு வர மாநகர் குளிரூட்டும் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால் நாளடைவில் அவை பழுதானதால், சீரமைக்கப்படாமல் அந்த பஸ் சேவைகள் அனைத்தும் ரத்தாகியது.

தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் சுற்றுலா முக்கியத்துவம் கருதி மாமல்லபுரம் பகுதிக்கு அடையாறில் இருந்து சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் மாநகர குளிரூட்டும் பேருந்துகள் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் வார இறுதி நாட்களில் பள்ளி மாணவ- மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் மாமல்லபுரத்தில் குவிந்து வருகின்றனர்.

ALSO READ  மாமல்லபுரத்துக்கு சுற்றுலா செல்ல நாளை முதல் தடை


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வரலாறு: மன்னர் காலத்தில் நடைபெற்ற தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம்

Admin

இந்திய கோவில்களும் அதில் ஒளிந்திருக்கும் அறிவியலும் உங்களுக்கு தெரியுமா?

Admin

கும்பாபிஷேகத்திற்கு தயாரானது தஞ்சை நகரம்.

naveen santhakumar