உலகம்

கூகுள் மேப்பில் திருமண ஆசையை வெளிப்படுத்திய விவசாயி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜெர்மனியில் விவசாயி ஒருவர் தன் காதலியிடம் வித்தியாசமான முறையில் திருமண ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜெர்மனியின் ஹட்டன்பெர்க் நகரைச் சேர்ந்த ஸ்டெஃபென் ஸ்வார்ஸ் என்ற பகுதி நேர விவசாயி ஒரு பெண்ணை காதலித்துய் வந்துள்ளார். அந்த பெண்ணை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நினைத்த அவர் அதை எப்படி வெளிப்படுத்துவது என தெரியாமல் தவித்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு திடீரென ஒரு யோசனை தோன்றியுள்ளது. அதன்படி தனது விளைநிலத்தில் “என்னை திருமணம் செய்து கொள்வாயா” என்பதை பெரிய எழுத்தில் செதுக்கி அதனை தவிர மற்ற இடங்களில் விதைகளை தூவி பயிரை வளர்த்துள்ளார். வானில் இருந்து பார்த்தால் அந்த எழுத்துகள் தெரியும் என்பதால் தனது காதலியிடம் ட்ரோன் மூலம் அப்பகுதியை பார்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ALSO READ  வியட்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கம் கண்டுபிடிப்பு..

அவரின் வேண்டுக்கோளை ஏற்று பறக்கும் ட்ரோன் மூலம் அந்த பகுதியை பார்வையிட்ட அந்த பெண், அவரின் திருமண விருப்பத்தை கண்டு இன்ப அதிர்ச்சியடைந்தார். உடனடியாக ஸ்டெஃபானுடனான திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.

இதற்கிடையில், திருமண விருப்பத்தை தெரிவித்த அவரது நிலம், கூகுள் வரைபடத்தில் தெரிந்தது அவருக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ  மனுசங்களா நீங்க எல்லாம்… டாக்டரை பார்த்து முறைத்த பிறந்த குழந்தை


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நகத்துக்குள் மீனை நீந்தச் செய்த வினோத கலைஞர் சன்னி- இணையத்தில் வைரல்…!

naveen santhakumar

புதிய வைரஸ் காரணமாக ஆஸ்திரேலியாவில் கொத்து கொத்தாக செத்து விழும் பறவைகள்…

naveen santhakumar

மூணு குழந்தை பெத்துக்கலாம் …. இங்கல்ல சீனாவில் …

News Editor