உலகம்

அமெரிக்க பொருளாதாரத்தை மீட்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் பொருளாதார ஆலோசகராக WWE Vince McMahon நியமனம்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்:-

கொரோனா பரவல் காரணமாக முற்றிலுமாக சீர்குலைந்துள்ள அமெரிக்க பொருளாதாரத்தை மீட்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் பொருளாதார ஆலோசகராக WWE நிறுவனரும் தலைவரும் முன்னாள் மல்யுத்த வீரருமான வின்ஸ் மிக்மேன் (Vince McMahon) நியமிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா திகழ்கிறது அமெரிக்காவின் பொருளாதாரம் முற்றிலுமாக விழுந்துள்ளது. இந்நிலையில் பொருளாதாரத்தை மீட்டுருவாக்கம் செய்வதற்காக விளையாட்டு, விவசாயம், வங்கி, வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பல்வேறு நபர்களை அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீட்பதற்கான குழுவில் இணைத்துள்ளார் அதிபர் டிரம்ப்.

ALSO READ  "சாணம் முதல் சரக்கு" வரை உலகத் தலைவர்கள் பரிந்துரைக்கும் கொரோனா மருந்துகள்… 

அமேசான் நிறுவனர் ஜெப் பிசோஸ், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க், டிவிட்டர் CEO டிம்குக், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், கொகோ-கோலா CEO  ஜேம்ஸ் குவின்ஸி, மற்றும் டனா ஒயிட் ஆகியோரும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த 200 நபர்கள் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார் குழுவில் இடம் பெற்று உள்ளவர்களின் பட்டியல் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது.

https://www.whitehouse.gov/briefings-statements/president-donald-j-trump-announces-great-american-economic-revival-industry-groups/

இதனிடையே வின்ஸ் மெக்மஹான் டிரம்பின் ஆலோசனை குழுவில்  இடம்பெற்றுள்ளதால் அவரது மகள் ஸ்டெஃபானி மிக்மேன் (Stephanie McMahon) மருமகனும் பிரபல மல்யுத்த வீரருமான Triple H (Paul Levesque) இடம்பெறுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ALSO READ  ‘உங்க கூட தாஜ்மகாலுக்கு நான் வரல’ … ட்ரம்ப் பயணத்தில் பின்வாங்கும் மோடி

ட்ரம்ப் சிறிதுகாலம் டபிள்யு குத்துச்சண்டை கள் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trump Vs McMahon

23வது WWE வ்ரெஸ்ல மேனியா  (Wrestle Mania 23) போட்டியில் முன்னாள் குத்துச்சண்டை வீரர் ஸ்டோன் கோல்டு ஸ்டீவ் ஆஸ்டின் (Stone Cold Steve Austin) தன்னுடைய பிரபலமான ஸ்டன்னர் மூலம் ட்ரம்பை அடித்து வீழ்த்தினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உலகளவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு !

News Editor

மரம் மற்றும் செடியை சேதப்படுத்தாமல் கொழுந்துவிட்டு எரியும் அதிசய நெருப்பு ஆச்சரியத்தில் மக்கள்…

naveen santhakumar

எல்லை தாண்டிய அதிகாரியின் உடலை எரித்த வடகொரியா:

naveen santhakumar