உலகம்

இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தோனேசிய நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா மாகாணத்தில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் ஒட்டுமொத்த நகரமே குலுங்கியது. இதனால் மக்கள் பதறியடித்துக்கொண்டு பீதியுடன் வீதிகளுக்கு ஓடி வந்தனர். பலர் திறந்தவெளிகளுக்கும், மைதானங்களுக்கும் பதற்றத்துடன், அலறியடித்துக்கொண்டு ஓடினர்.

இந்த நிலநடுக்கத்தில் சியாஞ்சூர் நகரம் அதிக பாதிப்புக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. 700-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மேலும் நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதால் அங்கு மின்சாரம் தடைபட்டது. இதனால் ஏராளமான வீடுகள் இருளில் மூழ்கியுள்ளது.


Share
ALSO READ  இந்தியா எப்போதும் அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்தாது:
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நவாஸ் ஷெரீப்பை பாகிஸ்தான் கொண்டுவர தீவிர ஏற்பாடு:

naveen santhakumar

கொரோனா பிடியிலிருந்து இந்தியா விரைவில் விடுதலை பெறும்-அமெரிக்க விஞ்ஞானிகள்…

naveen santhakumar

சூரியனின் மேற்பரப்பு இப்படித்தான் இருக்கும்.. முதல் முறையாக வெளியான புகைப்படம்

Admin