தொழில்நுட்பம்

சொமேட்டோ நிறுவன ஊழியர்கள் 3 சதவீதம் பேர் பணி நீக்கம்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உணவு பொருட்களை வீட்டு வாசலுக்கே கொண்டுவந்து வழங்கும் பிரபல உணவுப்பொருள் விநியோக நிறுவனமான சொமேட்டோ நிறுவனம் 3 சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உணவு பொருட்களை வீட்டு வாசலுக்கே கொண்டுவந்து வழங்கும் பிரபல உணவுப்பொருள் விநியோக நிறுவனமான சொமேட்டோ, 3 சதவீத பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளதால் 100 பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த செயல்முறை கடந்த இரண்டு வாரங்களாக நடந்து வருகிறது என்று சொமேட்டோ நிறுவன அதிகாரி ஒருவர் கூறினார். மேலும் செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த மூன்று மாதங்களில் சொமேட்டோ நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர இழப்பு ரூ.2.51 பில்லியன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது முந்தைய ஆண்டின் ரூ.4.30 பில்லியன் இழப்பு தொகையை விட நிகர இழப்பு வெகுவாக குறைந்துள்ளதை காட்டுகிறது. இதனால் சொமேட்டோ நிறுவனத்தின் வருவாய் ரூ.10.24 பில்லியனில் இருந்து ரூ.16.61 பில்லியனாக உயர்ந்துள்ளது. மேலும் சொமேட்டோ ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவது வழக்கமான நடைமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று சொமேட்டோ நிறுவனத்தின் இணை நிறுவனர் மோஹித் குப்தா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


Share
ALSO READ  மதுபான டெலிவரியில் களமிறங்கும் 'zomato'...
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஜியோ ஃபைபர் புதிய டேட்டா வவுச்சர் அறிமுகம்

Admin

வாட்ஸ் ஆப் கொடுத்த புதிய அப்டேட்; மகிழ்ச்சியில் பயனர்கள் !

News Editor

குறைந்த விலையில் BMW பைக் அறிமுகம் :

Shobika